வால்பாறையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், இன்றும், நாளையும் பள்ளிகள் மற்றும் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வால்பாறை மலைப்பகுதியில், தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் தவிக்கின்றனர். இடைவிடாமல் பெய்துவரும் மழையால், இங்குள்ள, அனைத்துப் பள்ளிகள் மற்றும் பாரதியார் பல்கலை கல்லூரிக்கு, இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment