தொடக்க கல்வித்துறை மூலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு, பள்ளி வேலை நாள்காட்டி வழங்காமல் காலதாமதம் செய்யப்பட்டு வருகிறது. இது சம்மந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மத்தியில், குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும், கடந்த, 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும், பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்க கல்வித்துறை மூலம், அந்தந்த பள்ளிகளுக்கு, பள்ளி வேலை நாள்காட்டி வழங்கப்படும். நாள் காட்டியில், பள்ளி மொத்த வேலை நாள், தேர்வு நாள், ஆசிரியர்களுக்கான பயிற்சி நாள் மற்றும் விடுமுறை நாட்கள் ஆகியவை தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
அதன்படி, பள்ளிக் கல்வித்துறை, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான பள்ளி வேலை நாள்காட்டியை ஒவ்வொரு ஆண்டும் வழங்கியது. இந்நிலையில், இந்த ஆண்டு, பள்ளிகள் திறந்த ஒரு மாதம் நிறைவடையும் நிலையில், இதுவரை தொடக்க கல்வித்துறை கீழ் இயக்கும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு, பள்ளி வேலைநாள் காட்டி வழங்கப்படாமல் உள்ளது. தொடக்கப் பள்ளி ஆசிரியர் ராமராசு கூறியதாவது: பள்ளிக் கல்வித் துறை மூலம், இந்தாண்டுக்கான பள்ளி வேலை நாள்காட்டி அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு மொத்தம், 210 வேலை நாட்கள். அதில், மூன்று நாட்கள் உள்ளூர் விடுமுறை விடலாம். மீதமுள்ள, 207 நாட்களில், 21 நாள் தேர்வு நாள், 183 பள்ளி நாட்களாகும். அதுபோல், தொடக்க கல்வித் துறை மூலம் அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு, பள்ளி வேலை நாள்காட்டி ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும். இந்த ஆண்டு, இதுவரை பள்ளி நாள்காட்டி தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு வழங்கப்படாமல் உள்ளது.
அதனால், மொத்த வேலை நாட்கள், அதில் தேர்வு நாள் மற்றும் விடுமுறை நாள் போன்ற எதுவும் தெரியாமல் உள்ளது. தவிர, இந்தாண்டு, பள்ளி ஜூன், 10ம் தேதி துவங்கப்பட்டதால், அதை ஈடு செய்ய எந்தெந்த சனிக்கிழமை பள்ளியை நடத்துவது எனவும் தெரியவில்லை.எனவே, பள்ளி நாள்காட்டியை உடனடியாக வழங்க, தொடக்க கல்வித் துறை இயக்குனர், அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment