"வகுப்புக்கு செல்லாமல் பட்டம் பெறுபவர்கள் பார் கவுன்சிலில் பதிவு செய்யவோ, வக்கீல் தொழில் புரியவோ அனுமதிக்கக்கூடாது" என, மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை வக்கீல் ரமேஷ், மதுரை ஐகோர்ட் கிளையில், தாக்கல் செய்துள்ள மனு: "வக்கீல் தொழில் புனிதமானது. ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில், எல்.எல்.பி., சட்டப்படிப்பு, பணத்திற்காக விற்கப்படுகிறது. அங்கு, எல்.எல்.பி., படிப்பவர்கள், முறையாக வகுப்புகளுக்குச் செல்வதில்லை. புரோக்கர்கள் மூலம், தேர்வு எழுதி பட்டம் பெறுகின்றனர். வக்கீல் தொழிலுக்கு, இது மரியாதைக் குறைவை ஏற்படுத்துகிறது.
புதிதாக எல்.எல்.பி., படித்து முடித்தவர்களை, பார் கவுன்சிலில் பதிவு செய்யவோ, வக்கீல் தொழில் செய்யவோ, அனுமதிக்கக் கூடாது என, உத்தரவிட வேண்டும். " இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி கிருபாகரன், தானாக முன்வந்து, மத்திய மனிதவள செயலர், சட்டத்துறை செயலர், இந்திய பார் கவுன்சில் தலைவர், ஆந்திரா, கர்நாடகா மாநில தலைமைச் செயலர்கள், சென்னை ஐகோர்ட் வக்கீல் சங்க நிர்வாகிகள் ஆகியோரை, எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த மனு, நேற்று, மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி கிருபாகரன், பிறப்பித்த உத்தரவு: "இதுபோன்ற ஒரு வழக்கு விசாரணை, 2009ல், நடந்த போது, ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில், "சட்டக்கல்லூரிகள், நர்சரி தோட்டம் போன்றவை. நல்ல விதையை விதைத்தால், நல்லதை அறுவடை செய்ய முடியும். அவர்களுக்கு நல்லதை கற்பிக்க இயலாத பட்சத்தில், அவர்களிடமிருந்து வெளிப்படுபவை நல்லவையாக இருக்காது" என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஆந்திராவிலும், கர்நாடகாவிலும், தலா 100 சட்டக்கல்லூரிகள் உள்ளன. இவற்றில் குற்றப்பின்னணி உள்ளவர்கள், அரசுத்துறையில் பணிபுரிபவர்கள், அடிப்படை கல்வித் தகுதி இல்லாதவர்கள், படித்து பட்டம் பெறுகின்றனர். இவ்வளவு சட்டக்கல்லூரிகள், அங்கு இருக்க வேண்டிய அவசியம் என்ன. அவற்றில் சேர்க்கப்படுவோர் தகுதியானவர்கள்தானா என, இரு மாநிலங்களின் பார்கவுன்சில் மற்றும் தலைமைச் செயலர்கள் விளக்க வேண்டும்.
இந்த கோர்ட், தானாக முன் வந்து, தமிழக போலீஸ் டி.ஜி.பி.,யை, 21 வது எதிர்மனுதாரராகவும், புரோக்கராக செயல்பட்ட மதுரை, ஜெகன் என்பவரை 22 வது எதிர் மனுதாரராகவும் சேர்க்க உத்தரவிடுகிறது.
குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு, சட்டப்படிப்பு படித்தவர்களின் விபரத்தை டி.ஜி.பி., தெரிவிக்க வேண்டும். ஜூலை 5 ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது." இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment