தமிழகத்தில் பள்ளி செல்லும் குழந்தைகள், தங்களது எடையை விட, அதிக எடையுள்ள புத்தக பையை சுமந்து செல்கின்றனர். ஆனால் கோவாவில் அடுத்த மாதத்தில் இருந்து இப்படிப்பட்ட குழந்தைகளை பார்க்க முடியாது. ஏனெனில் ஐந்து மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு, புத்தகங்களுக்கு பதிலாக, "இ-நோட்புக" வழங்கப்பட உள்ளது.
இது குறித்து கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் தெரிவித்ததாவது: "5 மற்றும் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு, முதல் கட்டமாக 50 ஆயிரம் "இ-நோட்புக்" வழங்கப்படுகிறது. இதன் மூலம் புத்தக சுமையிலிருந்து மாணவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். இந்த "இ-நோட்புக்" கில் அனைத்து பாடப் புத்தகங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும்.
இந்த ஆண்டு இறுதிக்குள், கோவாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் "வை-ஃபை" இன்டர்நெட் வசதி செய்யப்படும், இதன் மூலம் மாணவர்கள் "இ-நோட்புக்" மூலம் வகுப்பறையிலேயே இன்டர்நெட் பயன்படுத்தலாம்.
இப்புதிய திட்டத்தினால் கரும்பலகை மற்றும் நோட்டுப் புத்தகத்தில் இருந்து தள்ளி வைக்கப்படுகின்றனர் என அர்த்தம் இல்லை. மாணவர்கள் நோட்டுப் புத்தகத்தையும் பயன்படுத்தலாம், கரும்பலகையிலும் பாடங்கள் வழங்கப்படும். வீடுகளில் நடத்திய பாடங்களை திருப்பி பார்ப்பதற்கு "இ-நோட்புக்" பயன்படும்" என்றார்.

No comments:
Post a Comment