Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, June 29, 2013

    ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை1 கடைசி நாள்

    ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஜூலை 1) கடைசி நாளாகும். ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள், இரண்டாம் தாள் தேர்வுகளுக்கு இதுவரை தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப விற்பனை ஜூன் 17-ம் தேதி
    தொடங்கியது. இந்த ஆண்டு கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டன.முதல் நாளிலேயே 1.48 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையாகின. இதையடுத்து, கடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 7.5 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.

    இதில் இன்று மாலை வரை சுமார் 5 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி நாளான திங்கள்கிழமை(ஜூலை.1) ஏராளமானோர் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் நேரில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வு ஆகஸ்ட் 17-ம் தேதியும், இரண்டாம் தாள் தேர்வு 18-ம் தேதியும் நடைபெறுகிறது.

    No comments: