நிரம்பாமல் உள்ள, 46 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆறாம் கட்ட கலந்தாய்வு, ஜூலை, 9ம் தேதி நடக்கிறது.
டி.என்.பி.எஸ்.சி., விடுத்துள்ள அறிவிப்பு: வி.ஏ.ஓ., தேர்வு, கடந்த ஆண்டு, செப்டம்பர், 30ல் நடந்தது. இதுவரை நடந்த, ஐந்து கட்ட கலந்தாய்வு மூலம், 1,824 பேர், வி.ஏ.ஓ.,க்களாக, பணி நியமனம் செய்யப்பட்டனர். இன்னும், 46 பணியிடங்கள், காலியாக உள்ளன. இதை நிரப்ப, ஆறாம் கட்ட கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு, ஜூலை, 9ம் தேதி, தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கிறது.
இதில் பங்கேற்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர் பெயர்கள், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. விண்ணப்பதாரர், கலந்தாய்வுக்கு வரும்போது, அசல் சான்றிதழ் மற்றும் சான்றொப்பம் இட்ட பிரதி ஆகியவற்றை, கொண்டு வர வேண்டும். இவ்வாறு, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment