Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, June 26, 2013

    தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் மாற்று சான்றிதழ் பெற மாணவர்கள் தவிப்பு

    கடலூர் மாவட்டத்தில், தரம் உயர்த்தப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளிகளில், மாணவர்களுக்கு, மாற்றுச் சான்றிதழ் தராததால், வேறு பள்ளியில் சேர முடியாமல், மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
    தமிழகத்தில், ஆண்டுதோறும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளிகள், தரம் உயர்த்தப்படுகின்றன. இந்தாண்டு, தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை குறித்து, அதற்கான செலவுகள், ஆசிரியர்கள் நியமனம் குறித்து, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
    ஆனால், கல்வித்துறை சார்பில், இன்னும் அறிவிப்பு வெளியிடப்படாமல் உள்ளது. இதனால், நடுநிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, உயர்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு சேர்வதற்கும், உயர்நிலைப் பள்ளிகளில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்ற மாணவர்கள், பிளஸ் 1 சேருவதற்கு, இன்னும் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படவில்லை.
    மாற்றுச் சான்றிதழை கொடுத்து விட்டால், வேறு பள்ளிகளில் மாணவர்கள் சேர்ந்து விடுவர்; அப்படி சேர்ந்து விட்டால், தரம் உயர்த்தப்பட்ட தங்கள் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் போய் விடும் என்ற சூழலில், பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழ் வழங்காமல் உள்ளனர்.
    தற்போது, அனைத்துப் பள்ளிகளிலும், பிளஸ் 1 அட்மிஷன் முடிந்த நிலையில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், பள்ளிகளில் சேர, மாற்றுச் சான்றிதழ் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

    1 comment:

    prabhakaran said...

    our tn govt.doesnt release the upgrade of middle school list.so the teachers,parents,and students are affected.If the middle school willbe upgraded the students cannot join the same school. Because they are setteled in their new school. so the upgrade process is too waste this year.