தற்போது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள அல்டமாஸ் கபீரின் பதவிக் காலம் ஜூலை 19ம் தேதியுடன் முடிவடைவதையொட்டி, அடுத்த புதிய தலைமை நீதிபதியாக சதாசிவத்தை நியமித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டுள்ளார். இதற்கான அரசு அணை வெள்ளிக்கிழமை மாலை வெளியானது.
இதையடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவம், வரும் ஜூலை 19ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார். சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment