கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி துவங்குகிறது. அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய ஆசிரியர்கள் , வாழ்க்கையில் சாதிக்கும் ஆசை கொண்ட மாணவர்கள் இவைதான் முக்கிய கருப்பொருள்கள் இங்கு. அரசாங்கம் எத்தனை சலுகைகளை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வழங்கினாலும்
இந்த இரு அடிப்படை உணர்வுகள் ஒன்று சேராவிட்டால் அது வெற்றியடைவது சாத்தியமல்ல. சம்பளம் முக்கியம் என ஆசிரியரும் கல்வி சான்றிதழ் , உதவிப்பணம் மட்டும் முக்கியம் என மாணவரும் இருப்பின் இங்கு படித்து வெளிவரும் எதிர்கால சந்ததியினரின் கையில் சான்றிதழ் இருக்கும் ஆனால் அறிவுக்கூர்மையும் சாதிக்கும் திறனும் இருக்காது .. பிற துறையினர் வெளிப்பார்வைக்கு தோன்றுவதை சொல்வார்கள் .. ஆனால் இனம் மொழி மதம் பணம் தாண்டி கல்வி என்பது கற்கும் ஆசையினால் மட்டுமே பெறமுடிந்த செல்வம்.. இலக்கியம் எப்படி இலக்கிய உலகத்தினை சேர்ந்தவர்களுக்கு உரியதோ(!!!) அப்படியே கல்வியும் ... எல்லோராலும் காணப்படும் உலகம் வேறு .. அத்துறையினர் காணும் உலகம் வேறு ..கல்வியும் , வாழ்க்கைத் திறனும், தெளிவும் கொண்ட அற்புதமான சமுதாயம் அமைய வேண்டும் என்ற எண்ணத்துடன், கனவுடன் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு ஆசிரியருக்கும், மாணவர்க்கும் மனம் கனிந்த வாழ்த்துகள்!!!
நன்றி : கே.பி.ரக்ஷித்
No comments:
Post a Comment