Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, June 15, 2013

    பிளஸ் 1 மாணவர்களுக்கு ஒரு கோடி புத்தகங்கள் தயார்

    "வரும், 24ம் தேதி, பிளஸ் 1 மாணவர்களுக்கு, வகுப்புகள் துவங்கியதும், ஒரு கோடி பாடப் புத்தகங்கள் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன" என பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் சரவணவேல் தெரிவித்துள்ளார்.
    அவரது அறிக்கை: கடந்த, 10ம் தேதி, பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, 4.25 கோடி புத்தகங்கள், இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்காக, 2.62 லட்சம், தமிழ் பாட புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டன.

    பிளஸ் 1 வகுப்புகள், வரும், 24ம் தேதி துவங்கும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. பிளஸ் 1 வகுப்புகள் திறக்கப்படும் அன்று, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, பிளஸ் 1 பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். சுயநிதி பள்ளிகளுக்கு தேவையான பாடப் புத்தகங்களும் வழங்கப்படும்.

    பிளஸ் 1 மாணவர்களுக்கு மட்டும், 1.05 கோடி புத்தகங்கள் வழங்கப்படும். முதல் வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரையிலான புத்தகங்களும், பிளஸ் 2 புத்தகங்களும், டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள பாடநூல்கழக அலுவலகத்தில், விற்பனைக்கு, போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சரவணவேல் தெரிவித்துள்ளார்.

    No comments: