கல்வித் துறையில், கடந்த, 31ம் தேதி, 17 கல்வி அதிகாரிகள், ஒரே நாளில் பணி ஓய்வு பெற்றனர். பள்ளி துவங்கும் நேரத்தில், காலி பணியிடங்களை நிரப்பாவிடில், பணிகள் பாதிக்கும் என, ஆசிரியர்கள், ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
தேர்வுத்துறை இணை இயக்குனராக இருந்த ஆரோக்கியசாமி, மார்ச் மாதம் ஒய்வு பெற்றார். இந்நிலையில், நெல்லை, முதன்மை கல்வி அதிகாரிகள் இரண்டு பேர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், மூன்று பேர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், 10 பேர் உட்பட, 16 பேர், மே 31ல் பணி ஓய்வு பெற்றனர்.
ஏற்கனவே சிவகங்கை, விருதுநகரில் ரெகுலர், எஸ்.எஸ்.ஏ., - சி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஜூன், 10ல் அனைத்து பள்ளிகளும் துவங்கும் நேரத்தில், 19 கல்வி அதிகாரிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாணவர்கள் சேர்க்கை,சான்று வழங்குதல், இலவச பொருட்கள் வினியோகம் உட்பட, அலுவலக ரீதியான பணிகள் ஸ்தம்பிக்கும் நிலை உருவாகியுள்ளது.
கல்வி அதிகாரிகளின் காலி பணியிடங்களை நிரப்பாவிடில், பணிகள் பாதிக்கும் என, ஆசிரியர்கள், துறை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:
Post a Comment