அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், வரும், 10ம் தேதி முதல், 29ம் தேதி வரை வழங்கப்படுகிறது.
தமிழக அரசு அறிவிப்பு: தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் இயங்கும், அரசு பொறியியல் கல்லூரி, உதவி பெறும் பொறியியல் கல்லூரி, கலைக்கல்லூரிகள் ஆகியவற்றில் உள்ள, எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், மாநிலம் முழுவதும், 42 மையங்களில், வரும், 10ம் தேதி முதல், 29ம் தேதி வரை, வழங்கப்படும்.
எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் மற்றும், எஸ்.சி., அருந்ததியர் பிரிவினர், 150க்கான டி.டி.,யும், இதர பிரிவினர், 300 ரூபாய்க்கான, டி.டி.,யையும் கொடுத்து, விண்ணப்பங்களை பெறலாம். "செயலர், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., சேர்க்கை, அரசு தொழில்நுட்ப கல்லூரி, கோவை- 641013" என்ற முகவரிக்கு, டி.டி., எடுக்க வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, மேற்கண்ட முகவரிக்கு, அனுப்ப வேண்டும். இதற்கான கலந்தாய்வு, ஜூலை, இரண்டாவது வாரத்தில், கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் நடக்கும்.இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில், கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில், விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், செங்கல்பட்டில் உள்ள ராஜேஸ்வரி வேதாச்சலம் கலை கல்லூரியிலும், திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணியில் உள்ள ஸ்ரீ சுப்ரமணியசாமி அரசு கலை கல்லூரியிலும், விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.

No comments:
Post a Comment