Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, January 5, 2017

    பொங்கல் போனஸ் உயர்த்தி வழங்கப்படுமா அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

    அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் கடந்த ஆண்டுகளில் A,B ஊழியர்களுக்கு 1000/- C,D ஊழியர்களுக்கு 3000/- வழங்கப்பட்டு வந்தது ஆனால் தற்போது பொங்கல் போனஸ் தொகையினை உயர்த்தி வழங்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்னும் ஒரிரு நாளில் முறையான அறிவிப்பு வெளியாகும்.
    சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
    தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி போனஸ் உச்சவரம்பு தொகை ரூ.3,500-லிருந்து ரூ.7,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

    தொழிற்சாலை மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளிக்கு முன்னதாக போனஸ் வழங்கப்படுகிறது. இதற்கான போனஸ் சட்டம் கடந்த 1965-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது.

    இந்தச் சட்டத்தில் கடந்த 1993-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, போனஸ் உச்சவரம்பு அதிகபட்சமாக 3,500 என்று அறிவிக்கப்பட்டது. மேலும் போனஸ் பெறுவதற்கான சம்பள உச்சவரம்பும் 10 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.

    அதன்பின், இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவில்லை. போனஸ் தொகை ரூ.3,500 என்றே வழங்கப்பட்டது. கடந்த 12 ஆண்டு களாக போனஸ் தொகை உயர்த்தப் படாததை கண்டித்து மத்திய தொழிற் சங்கங்கள் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டன. மத்திய அமைச்சர்கள் குழு, தொழிற்சங் கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை யில், போனஸ் தொகையை இரட்டிப்பாக்கவும், போனஸ் பெறுவதற்கான சம்பள உச்ச வரம்பை உயர்த்தவும் ஒப்புக் கொண்டது.

    இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று கூடியது. அப்போது பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். மேலும், இந்த ஆண்டு போனஸ் தொகையை ரூ.3,500-இல் இருந்து ரூ.7,000 ஆக உயர்த்தவும், போனஸ் பெறுவதற்கான சம்பள உச்ச வரம்பை தற்போதுள்ள ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

    இந்த தொகை 20 ஊழியர்கள் அல்லது அதற்கு மேல் உள்ள எல்லா நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த போனஸ் உயர்வு ஏப்ரல் 1, 2015 முதல் அமலுக்கு வருகிறது. இதற்காக, ‘போனஸ் (திருத்த) மசோதா-2015’, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

    போனஸ் சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்ற அனுமதிக் காக அனுப்பப்பட்டுள்ளது. நாடாளு மன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடத்துவது குறித்து நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. எனினும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், வரும் 26-ம் தேதி மீண்டும் அமைச்சரவை கூடி முடிவெடுக்க உள்ளது. நவம்பர் மாத இறுதியில் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறும் போது, போனஸ் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

    No comments: