கோவை, பாரதியார் பல்கலையின் ஆண்டு வரவு - செலவு கணக்கு சமர்ப்பிப்பதில் நிலவும் இழுபறிக்கு, அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும், பல்கலைகள், டிச., இறுதியில் ஆண்டறிக்கை மற்றும் வரவு - செலவு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
பல்கலை நிதிக்குழுவின் பார்வைக்கு சென்ற பின், பொது நிதிக்குழு, ’சிண்டிகேட்’ ஆகியவற்றின் ஒப்புதல் பெற்று, ’செனட்’ கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், கோவை, பாரதியார் பல்கலையின், ’செனட்’ கூட்டம், நேற்று முன்தினம் நடப்பதாக அறிவித்து, ஒத்தி வைக்கப்பட்டதால், அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு பல்கலை பேராசிரியர்கள் சங்க மாநில நிர்வாகிகள் கூறுகையில், ’பாரதியார் பல்கலையில், பல்வேறு முறைகேடு புகார் எழுந்துள்ள நிலையில், ’செனட்’ கூட்டத்தை, நிர்வாக காரணங்கள் கூறி ஒத்தி வைப்பது ஏற்புடையதல்ல. உடனடியாக கூட்டத்தை கூட்டி, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்’ என்றனர்.
No comments:
Post a Comment