அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விரைவில் உடை கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது.
ம.பி., மாநிலத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் உள்ள, அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
’எதிர்கால தலைமுறையை உருவாக்குவோர் என அடையாளம் காணப்படும் வகையில், ஆசிரியர்கள், தங்கள் உடையின் மீது, ’ஓவர்கோட்’ அணிய வேண்டும்; அதில், அவர்களது பெயர் பொறித்த, ’பேட்ஜ்’ இடம் பெற்றிருக்க வேண்டும்’ என, அம்மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஜன., 4க்குள், இந்த உடையின் நிறம், வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு பணிகளை, முடிக்கும் பொறுப்பை, ’நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி’யிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment