அரசு பள்ளி ஆசிரியர் என்றாலே இப்படிதான் என்ற கற்பனைக்கு இடம் கொடுக்காதவராக, விடுமுறை நாட்களிலும் ஏழை மாணவர்களுக்கு கற்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் பேரையூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் செல்வராஜ்.
பேரையூர் பகுதியில் அதிக எண்ணிக்கையில் பள்ளிகள் இருந்தாலும் இப்பள்ளியில் சேர மாணவியருக்கு ஆர்வம் அதிகம். படிப்புக்கும், ஏழை மாணவிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் இப்பள்ளியில் தேர்ச்சியை அதிகரிக்க சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகிறார் செல்வராஜ்.
அவர் கூறியதாவது:
இப்பகுதி கிராம மாணவிகள் படிக்க வருவதே பெரிய விஷயம். அவர்களை தேர்ச்சியடைய வைக்க அனைத்து ஆசிரியர்களும் அர்ப்பணிப்புடன் கற்பிக்கிறோம். தலைமையாசிரியர் முழு ஒத்துழைப்பு அளிக்கிறார். என்னை பொறுத்தவரை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ள வசதியில்லாத மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுக்கிறேன்.
இதனால் கடந்தாண்டு 100 சதவீதம் தேர்ச்சி பெற்றோம். நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு விடுமுறை நாட்களிலும் நான் நடத்தும் வகுப்பால் வெற்றியின் படிக்கட்டுகளில் ஏறி உயர்கல்விக்கு சென்றுள்ளனர். இதை தொடர்ந்து செய்வேன், என்றார்.
No comments:
Post a Comment