Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, January 6, 2017

    40வது புத்தக கண்காட்சி துவக்கம்!

    கீழ்ப்பாக்கம், செயின்ட் ஜார்ஜ் பள்ளியில், 40வது சென்னை புத்தக கண்காட்சி, துவங்கியது. கடந்த, 39 ஆண்டுகளாக, பொங்கல் பண்டிகையை ஒட்டி, ’பபாசி’ எனும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில், பிரம்மாண்டமான புத்தக கண்காட்சி, சென்னையில் நடத்தப்படுவது வழக்கம். இதற்காக, தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள தமிழ் வாசகர்கள், புத்தகங்களை சேகரிக்க, சென்னை வருவர். 


    இந்த ஆண்டு, 40வது புத்தக கண்காட்சி, சென்னை, கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லுாரி எதிரில் உள்ள, செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில், இன்று  துவங்கி, வரும், 19ம் தேதி வரை நடைபெறுகிறது. 

    வார நாட்களில், மதியம், 2:00 மணிக்கும், விடுமுறை நாட்களில், காலை, 11:00 மணிக்கும் துவங்கும் கண்காட்சி, இரவு 9:00 மணி வரை நடைபெறும். இதற்காக, 700 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், ஆங்கில நுால்களுக்காக, 151 அரங்குகளும், மலையாள நுால்களுக்காக, இரண்டு அரங்குகளும், மற்றவை தமிழ் நுால்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

    இக்கண்காட்சியில், 350 பதிப்பாளர்களும், 100க்கும் மேற்பட்ட விற்பனையாளர்களும், நேரடியாக பங்கேற்கின்றனர். கடந்த ஆண்டு விற்பனையான, 15 கோடி ரூபாயை விட, கூடுதலாக, ஐந்து கோடி ரூபாய்க்கு புத்தகங்களை விற்க, பபாசி இலக்கு நிர்ணயித்துள்ளது. 

    புத்தக கண்காட்சிக்கு, 10 ரூபாய்க்கான நுழைவு டிக்கெட்டுகளை பெற வேண்டும். இலவச டிக்கெட்டுகள்10 லட்சம் பள்ளி மாணவர்களு, இலவச டிக்கெட்டுகளுடன், 250 ரூபாய்க்கான சலுகையை, எம்.ஜி.எம்.டி.சி., வேல்டு நிறுவனம் வழங்குகிறது. 

    சிறப்பு நிகழ்ச்சிகள்புத்தக கண்காட்சி நடைபெறும், 14 நாட்களும், மாலை, 6:00 மணிக்கு, சிறப்பு பல துறை வல்லுனர்கள் பங்கேற்கும் சொற்பொழிவுகள், புத்தக வெளியீடுகள், மாணவர்களுக்கான போட்டிகள், குறும்பட போட்டிகள் நடைபெறும். 
    என்னென்ன வசதிகள் 


    வாகன நிறுத்தம்

    செயின் ஜார்ஜ் பள்ளியில், 4,000 கார்களும், அதற்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்களும் நிறுத்த, இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக வரும் வாகனங்கள், பச்சையப்பன் கல்லுாரி வளாகத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


    ஒரே நேரத்தில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த, பூந்தமல்லி சாலையில் உள்ள நுழைவாயில் வழியாக நுழைந்து, புது ஆவடி சாலையில் உள்ள, சங்கர் தெருவின் வழியாக, வெளியில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    பி.ஓ.எஸ்., மிஷின்கள் 

    தற்போது,  மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்வதால், அதிகமான ரொக்கத்திற்கு, புத்தகங்கள் வாங்க முடியாது என்பதால், அனைத்து அரங்குகளிலும், பி.ஓ.எஸ்., என்னும், ’ஸ்வைப் மிஷின்’கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    ’பபாசி’யின் சார்பில், 50 மிஷின்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், அரங்குகளில் ஏற்படும் சில்லரை தட்டுப்பாட்டை நீக்க, 2,000 - 500 ரூபாய்க்கு, 100, 50 ரூபாய்க்கான டோக்கன்களை, வாசகர்களுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    ஏ.டி.எம்., இயந்திரங்கள் 

    வாசகர்களுக்கு  பணத்தட்டுப்பாடு இருக்கும் என்பதால், எப்போதும் பணம் எடுக்கும் வகையில், சிட்டி யூனியன் வங்கி, கரூர் வைஷ்யா வங்கிகளின், ஏ.டி.எம்., மையங்களும், கண்காட்சி நிகழ்விடத்தில் அமைக்கப்பட உள்ளன. 

    உணவு கூடம் 

    வாசகர்களின் அறிவுப்பசிக்கு புத்தகங்கள் பயன்பட்டாலும், குடும்பத்துடன், அவற்றை வாங்க வரும் வாசகர்களின் வயிற்றுப்பசியை போக்க, தரமான உணவு விடுதிகளும் காத்திருக்கின்றன. போலீசார், போக்குவரத்து போலீசார், தீயணைப்பு துறையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். குடிநீர், கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

    ’பபாசி’ செயலி 

    சென்னை புத்தக கண்காட்சியில் இடம்பெறும் அரங்குகளின் விபரங்கள், நிகழ்வுகள் குறித்த செய்திகளை அறிய, கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள, ’பபாசி’ என்ற செயலியை தரவிறக்கம் செய்யலாம். ’பபாசி’ செயலி பதிவாளர்கள், 200 ரூபாய், சீசன் டிக்கெட் பெற்று, நால்வரும்; 100 ரூபாய் சீசன் டிக்கெட் பெற்று, இருவரும், 14 நாட்களுக்கும், கண்காட்சிக்கு சென்று வர முடியும்.

    No comments: