உயர்கல்வியை வணிக மயமாக்கும் நோக்கில் உலக வர்த்தக அமைப்பின்(WTO), கல்வியை சந்தை பொருளாக மாற்றும் ஒப்பந்தத்தில்(GATS) இந்தியா கையெழுத்திட உள்ளது. இதனால் உயர்கல்வியானது வர்த்தக மயமாக்கப்பட்டு ஏழை மாணவர்களுக்கு எட்டா கணியாகிவிடும் ஆபத்து உள்ளதாக ஆசிரியர் அமைப்புகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத்தலைவர் தாமஸ் அமலநாதன், மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்டப் பொருளாளர் குமரேசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்திய அரசு உயர்கல்வியை வணிகமயமாக்க 2004லிருந்து முனைப்பு காட்டிவருகிறது. அன்று துவங்கிய பேச்சுவார்த்தை முற்று பெற்று வருகிற டிசம்பர் 15 முதல் 18 வரை கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் நடைபெறும் உலக வர்த்தக அமைப்பு மாநாட்டில் நிரந்தர ஒப்பந்தமாக மாற்றுவதற்குரிய சாசனத்தில் இந்தியா கையெழுத்திட உள்ளது. இது இந்தியாவின் உயர்கல்வியை ஆபத்தான நிலைக்கு இழுத்துச் செல்லும். இந்த ஒப்பந்தம் மூலம் உலக அளவில் உள்ள 160 நாடுகளின் உயர்கல்வி நிறுவனங்கள் இந்தியாவிற்குள் வந்து கடை திறப்பதற்கான வாசல் திறக்கப்பட உள்ளது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகையில் 8.14 சதவீத பேர் மட்டுமே உயர்கல்வி பெற்றுள்ளனர். நாடு விடுதலை அடைந்து 68 ஆண்டுகள் ஆன பிறகும் 10 சதவீதத்திற்கு குறைவானவர்களே உயர்கல்வி பெறும் வாய்ப்பு பெற்றுள்ளனர் என்பது தேசத்தின் அவமானமாகும். இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் உயர் கல்வி பெறுபவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தும். இதன் மூலம் உலக நாடுகளுக்கு தேவையான கொத்தடிமை தொழிலாளர்களை உருவாக்கும் தொழிற்சாலைகாளக உயர்கல்வி நிறுவனங்கள்
மாற்றப்படும். என்ன கற்பிக்கப்பட வேண்டும் என்பதை அந்நிய நாட்டு
நிறுவனங்களே முடிவு செய்யும். மேலும் உயர்கல்விக்கு அரசாங்கம் கொடுக்கும்
மானியங்களும் முற்றிலும் நிறுத்தப்படும்.
பன்முக பண்பாட்டைக் கொண்ட இந்தியாவில் 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற
அடிப்படை கோட்பாட்டிற்கு எதிராக கலாச்சாரஒருமைப்பாட்டை முன் வைத்து, பல
அடுக்கு கல்வி முறையைத் தொடரச் செய்து சமூக பதற்றத்தை உருவாக்கக்கூடிய
கூறுகளை தற்பொழுது வெளியிடப்படும் புதிய கல்விக்கொள்கையின் விவாத
பொருளாக்கப்பட்டுள்ளது. இது குறித்த கருத்து கேட்பு கூட்டங்களை கண்
துடைப்பாக மத்திய அரசு நடத்தி முடித்துள்ளது. புதிய கல்விக்கொள்கை
காவிமயமாக வெளிவரும் ஆபத்து உள்ளது. இதனால் வரலாறுகள் உண்மைக்கு புறம்பாக திரித்து எழுதி வெளியிடப்படவுள்ளது.
உலக வர்த்தக அமைப்பின் (WTO) சேவையில் வர்த்தகத்திற்கான பொது
ஒப்பந்தத்தின்(GATS) கீழ் உயர் கல்வியில் சந்தையை அனுமதிக்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. கல்வியின் பொருளையே மாற்றும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடக்கூடாது.
நைரோபியில் வருகிற டிசம்பர் 15 முதல் 18 வரை நடைபெவுள்ள உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் 10வது வர்த்தக அமைச்சர்கள் மாநாட்டிற்கு முன்னதாக, இந்தியா 2004 மற்றும் 2005ல் தெரிவித்துள்ள விருப்பங்களை திரும்பப்பெற வேண்டும். திரும்ப தவறினால் நமது கல்வி என்பது சந்தையின் நிலைக்குத் தகுந்தாற்போல் பணம் இருப்பவர் மட்டுமே பெறக்கூடிய ஒரு பண்டமாக மாறிவிடும்.
இந்திய மக்கள் இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். இதற்கான பேச்சுவார்த்தை மிகவும் இரகசியமாக மக்களுக்கு தெரியாமல் நடைபெறுகிறது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடக்கூடாது எனக்கோரி குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பித்த கடந்த நவம்பர் 26 அன்று பள்ளிக்கல்லூரி மற்றும் பல்கலைகழக ஆசிரியர் அமைப்பு மற்றும் மாணவர் அமைப்புடன் இணைந்து இந்திய தலைநகரில் பாராளுமன்றம் நோக்கி மாபெறும் பேரணியை நடத்தி முடித்துள்ளோம். தமிழக அளவில் பல்வேறு ஆசிரியர் அமைப்புகள் மற்றும் பொது மக்களை இணைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
எனவே மத்திய அரசு உயர்கல்வியை வணிகமயமாக்குவதையும், வகுப்பு வாதத்தை திணிப்பதையும் உடனடியாக கைவிட வேண்டும் என எங்கள் அமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
(ஆ.முத்துப்பாண்டியன்
மாவட்டச் செயலாளர்)
(ஆ.முத்துப்பாண்டியன்
மாவட்டச் செயலாளர்)
No comments:
Post a Comment