(அறத்தினூஉங்கு ஆக்கம்இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு) என்ற வள்ளூவர் வாக்குபடி (பொருள்;ஒருவருடைய வாழ்க்கையில் அறத்தைவிட நன்மையானது ஏதும் இல்லை ,அறத்தை மறப்பது போன்ற கொடியது எதுவும் இல்லை).
06/12/2015 ஞாயிறு, சென்னையில் கனமழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக SSTA குழுவினர், உடன் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ,குறுவள மைய ஆசியர்கள்,தன்னார்வலர்கள் மூலம் சேகரிக்கப்பட்ட சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட 20 வகையான நிவாரணப்பொருட்களை ( உணவு உட்பட ) மழையால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளை நேரில் கண்டு தேவையான பொருட்களை நேரடியாக வழங்கியது...
பொருட்கள் வழங்கப்பட்ட இடங்களில் குறிப்பிடத்தக்கவை: மிகவும் பாதிக்கப்பட்ட வடசென்னை பகுதிகளான....
1. கொருக்குப்பேட்டை
2. தண்டையார்பேட்டை
3. புளியந்தோப்பு
4. கோயம்பேடு
5. ஜெ ஜெ நகர்
6. சத்யா நகர்
7. அமைந்தகரை
8. S.I.T காலனி
9. புது காலனி
10. வியாசர்பாடி
இதுபோன்ற கவனிப்பாரற்ற பாமர மக்கள் உள்ள இடங்கள். ...
சேகரிக்கப்பட்ட பொருள்கள் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான
20 வகையான நிவாரணப் பொருட்களை கனமழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 11 இடங்களில் தொடர்ச்சியாக வழங்கப்பட்டன.(காலை 11.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை )
நிவாரணப் பொருள்கள் வழங்கும் போதும் கனமழை பெய்தது , மதிய உணவு கூட உண்ணாமலும் ( மக்கள் படும் துன்பத்தை பார்த்து உண்ண மனமில்லாது ) இரவு வரை சோர்வின்றி இப்பணியை களத்தில் (அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப்புழி )அனைத்தையும் இழந்தவர்களுக்கு ஓர் வேளையாவது உண்ண உணவு ,உடை அளிக்க உதவிய ஆசிரிய உடன்பிறப்புகள் அனைவருக்கும், இதற்காக இறைவனிடம் வேண்டிய ,செய்திகளை பகிர்ந்த நல்ல உள்ளங்களுக்கு எங்களின் சிரம் தாழ்ந்த நன்றி,நன்றி, நன்றி. (இது வெற்று விளம்பரத்திற்காக அல்ல ...அனைத்தையும் இழந்தவர்களின் கால் சாண் வயிற்றுக்கும்,அவர்களின் குழந்தைகளுக்கும்... இதை காண்பவர்கள் தங்களால் ஆன உதவிகளை அவர்களுக்கு செய்ய வேண்டும் என ஊக்கப்படுத்துவதற்காக தான்)
No comments:
Post a Comment