அரசு கலைக்கல்லுாரியில், வகுப்பு நேரங்களை மாற்றக்கூடாது என மாணவர்கள் நேற்றும், வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், 2,900 மாணவர்கள் படித்து வருகின்றனர். பேராசிரியர்கள் பற்றாக்குறை உட்பட காரணங்களால், இரு ஷிப்ட்களாக கலை மற்றும் அறிவியல் பிரிவுகளுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
சமீபத்தில், பல்வேறு பிரிவுகளுக்கு பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டதையடுத்து, ஷிப்ட் முறையில் மாற்றம் கொண்டு வர, கல்லுாரி நிர்வாகத்தினர் திட்டமிட்டனர். இதற்கு மாணவர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. பழைய முறையிலேயே வகுப்புகளை நடத்த வலியுறுத்தி, 8 ம் தேதி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் சிலர் கூறுகையில், எங்களில் பலர் பகுதி நேர வேலைக்கு சென்றபடி, படித்து வருகிறோம்.
No comments:
Post a Comment