வகுப்பறையில் மது குடித்து, வாந்தி எடுத்து, மயங்கி விழுந்ததால், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்ட, நான்குமாணவியரை, மீண்டும் இன்று பள்ளியில் சேர்க்க, கலெக்டர் தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள், கடந்த, 21ம் தேதி நடந்தது. தேர்வு எழுதி கொண்டிருந்தபோது, பிளஸ் 1 மாணவியர், நான்கு பேர், வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.
விசாரணையில், அவர்கள், மது அருந்தியது தெரிய வந்தது. மாணவி ஒருவரின் பிறந்த நாள் விழாவுக்காக, மாணவியர் மது அருந்தியது தெரிந்தது.மாணவியரிடம், தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி, 'டிசி' எனப்படும், பள்ளியிலிருந்து வெளியே அனுப்புவதற்கான சான்றிதழை கொடுத்துள்ளார்;
மூன்று மாணவியர் பெற்றுக்கொள்ளவில்லை.பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மாணவியரை மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என, பல தரப்பில் இருந்தும் கோரிக்கை விடப்பட்டது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட மாணவியருக்கு, 'கவுன்சிலிங்' எனப்படும் நல்லொழுக்க அறிவுரை வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து, இன்று மீண்டும் அவர்கள் பள்ளியில் சேர்க்கப்படுகின்றனர்.
இது குறித்து நாமக்கல் கலெக்டர் தட்சிணாமூர்த்தி கூறியதாவது:இன்றைய மாணவர்கள் மத்தியில், சினிமா, 'டிவி', மொபைல் போன் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. நல்லது எது, கெட்டது எது என, பிரித்து பார்க்கத் தெரியவில்லை. சினிமா வேறு, நிஜம் வேறு என்பதை மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் தான் புரியவைக்க வேண்டும்.
மாணவர்களுக்கு அறிவு மட்டுமின்றி, நற்பண்புகளையும் ஆசிரியர்கள் கற்றுத் தர வேண்டும். மாணவ, மாணவியரை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். வகுப்பறையில் விழா கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment