சென்னை எழும்பூர், சென்ட்ரலில் இருந்து பல்வேறு விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பொது மக்களின் வசதிக்காக வெள்ளிக்கிழமை பாஸஞ்ஜர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.
இது குறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை கடற்கரை - ஹைதராபாத் பாஸஞ்ஜர் சிறப்பு ரயில்: சென்னை கடற்கரையில் இருந்து இந்த ரயில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்குப் புறப்பட்டு திருவள்ளூர், அரக்கோணம், ரேணிகுண்டா, குண்டூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, வாரங்கல், காசியாபேட், செகந்தராபாத் வழியாக ஹைதராபாத் செல்லும்.
ஜோலார்பேட்டை - திருவனந்தபுரம்: ஜோலார்பேட்டையில் இருந்து இந்த சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்குப் புறப்பட்டு சேலம், ஈரோடு, பாலக்காடு, எர்ணாகுளம், கொல்லம் ரயில் நிலையங்கள் வழியாக திருவனந்தபுரம் சென்றடையும்.
சென்னை கடற்கரை - திருநெல்வேலி: சென்னை கடற்கரையில் இருந்து இந்த சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்குப் புறப்பட்டு பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி வழியாக திருநெல்வேலி சென்றடையும்.
சென்னை கடற்கரை - ராமேஸ்வரம்: சென்னை கடற்கரையில் இருந்து இந்த சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை பகல் 12.30 மணிக்குப் புறப்பட்டு பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை வழியாக ராமேசுவரம் சென்றடையும்.
சென்னை கடற்கரை - ஹெளரா: சென்னை கடற்கரையில் இருந்து இந்த சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்குப் புறப்பட்டு பெரம்பூர், அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர், விஜயவாடா, ராஜமுந்தரி, துவ்வாடா, விஜயநகரம், புவனேசுவரம், காரக்பூர் வழியாக ஹெளரா சென்றடையும்.
அரக்கோணம் - மும்பை சிஎஸ்டி: அரக்கோணத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இந்த சிறப்பு ரயில் காலை 8.20 மணிக்குப் புறப்பட்டு ரேணிகுண்டா, ராஜம்பேட்டை, கடப்பா, எரகுண்டலா, தாதிபத்ரி, கூட்டி, குண்டக்கல், அதோனி, மந்த்ராலயம் சாலை, ராய்சூர், வாடி, சோலாப்பூர், புணே, கல்யாண் வழியாக மும்பை சிஎஸ்டி சென்றடையும்
No comments:
Post a Comment