கட்டட உறுதி, பூச்சிக்கொல்லி, கிருமிநாசினி தெளித்தல் போன்ற முக்கிய பணிகளை மேற்கொண்டு, பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதன்மை கல்வி அதிகாரிகளிடம் சான்றிதழ் தர, பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் பள்ளி வளாகத்தை முறைப்படி சுத்தம் செய்ய வேண்டும். நோய்க்கிருமிகள் பரவாத வண்ணம், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
வகுப்பறைகளின் அனைத்து சுவர்களின் உறுதி தன்மையை கண்டறிய வேண்டும். பள்ளி கழிவறைகள் மூலம் தொற்று நோயும் பரவாமல் பராமரிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு, 'குளோரின்' தெளித்து பாதுகாப்பான குடிநீர் வழங்க உத்தரவிட வேண்டும்.மின் சாதனங்களை பரிசோதனை செய்து நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களை சுத்தம் செய்து, பாத்திரங்களை சுத்தம் செய்த பின் சமையல் செய்ய வேண்டும். இதுபோன்ற நட வடிக்கைகளை மேற்கொண்டு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம், தலைமை ஆசிரியர்கள் சான்றிதழ் தர வேண்டும்.
மேலும், dirsedu@nic.in, dsetamilnadu@gmail.com என்ற இ - மெயில் முகவரியில் அனுப்ப வேண்டும்.இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment