உயர்கல்வி கற்பதற்கு ஆசிய நாடுகளில் சிறந்த நாடு மலேசியா. சுமார் 100க்கும் மேலான உலக நாடுகளிலிருந்து, குறைந்தது 40,000 மாணவர்கள் தங்களது உயர்கல்வியினை மலேசியாவில் பயின்று வருகின்றனர். மேலும், உலகத் தரத்துக்கு இணையாக கல்வித் துறையில் வளர்ச்சி அடைந்து வரும் மலேசிய பல்கலைக்கழகங்களில், மேலாண்மை, சிவில் இன்ஜினியரிங் மற்றும் சட்டக் கல்வி போன்ற பட்டப் படிப்புகள் சர்வதேச மாணவர்களின் முதன்மை தேர்வாகவே உள்ளது.
தகுதி தேர்வு இல்லை
மலேசியா பல்கலைக்கழகங்களில் மாணவர்கள், தங்களது உயர் கல்வியினை பயில சேட், டோபல் போன்ற எவ்விதமான தகுதி தேர்வுகளை எழுத வேண்டும் என்ற நிபந்தனைகள் இல்லை. மேல்நிலை மற்றும் இளநிலை கல்வியில் 60 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. மலேசியா பல்கலைக்கழகங்களில், உயர்கல்வி சேர்க்கைக்காக விண்ணப்பித்த மாணவர்களில் ஆங்கிலம் மொழி அல்லாத நாட்டைச் சேர்ந்தவராக இருக்கும் பட்சத்திலேயே ஆங்கில மொழி புலமை தேர்வு கல்வி நிறுவனங்களால் நடத்தப்படும்.
உதவித்தொகை
மலேசியா சர்வதேச உதவித்தொகை திட்டத்தின் கீழ், அந்நாட்டு அரசாங்கம் மாணவர்களுக்கு உயர்கல்விக்கான பல்வேறு உதவித்தொகையை வழங்கிவருகின்றது.
அதுமட்டுமின்றி, மலேசியா காமன்வெல்த் உதவித்தொகை மற்றும் ஆதரவு ஊதியம் திட்டத்தின் மூலம் காமன்வெல்த் நாடுகளில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட மாணவர்களுக்கு முதுகலை பட்டப் படிப்பிற்கான உதவித்தொகையும் வழங்குகின்றது. மலேசியாவில் இயங்கி வரும் பல்வேறு தனியார் வங்கிகளும் சர்வதேச மாணவர்களுக்கு உயர்கல்விக்கான கல்வி கடன் உதவியைச் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.
சில முக்கிய பல்கலைக்கழகங்கள்
மலயா பல்கலைக்கழகம்
பட்டப் படிப்புகள்: மானிடவியல்,சமூகவியல், ஆங்கிலம்
வருடாந்திர கட்டணம்: ரூ 1 லட்சம் முதல்
தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மலேசியா
பட்டப் படிப்புகள்: தொழில்துறை கணிதம், கட்டுமானம்
வருடாந்திர கட்டணம்: ரூ 1.5 லட்சம்
மல்டிமீடியா பல்கலைக்கழகம்
பட்டப் படிப்புகள்: திரைப்பட கலை, மேலாண்மை, சட்டம்
மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
பட்டப் படிப்புகள்: சட்டம் மற்றும் நிர்வாக அறிவியல்
வருடாந்திர கட்டணம்: ரூ 1.07 லட்சம்
No comments:
Post a Comment