தமிழகத்தில், 2006ம் கல்வி ஆண்டு முதல், அனைத்து பள்ளிகளுக்கும், தமிழ் கட்டாயம் என்ற சட்டம் அமலாகியுள்ளது. அதனால், 'ஓரியன்டல்' எனப்படும், சிறுபான்மை அல்லது அயல்மொழிகளில் படிக்கும் மாணவர்கள், கண்டிப்பாக, தமிழைப் படிக்க வேண்டும்.இதனால், மாணவர்களும், அவர்களின் பெற்றோரும், தங்கள் தாய்மொழியை படிக்காவிட்டால், தங்கள் மாநில வேலை வாய்ப்பு பாதிக்கப்படும் என, அதிர்ச்சி அடைந்தனர்.இதையடுத்து, தங்கள் தாய்மொழித் தேர்வையும், விருப்ப மொழிப் பாடமாக எழுதலாம் என, அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, தெலுங்கு, மலையாளம், உருது, இந்தி, சமஸ்கிருதம், பிரெஞ்ச், கன்னடம், குஜராத்தி, அரபி என, ஒன்பது பாடங்களில் ஒன்றை, மாணவர்கள் எழுதலாம் என, இரு வாரங்களுக்கு முன் தேர்வுத்துறை அறிவித்தது.ஆனால், இந்த மொழி பாடத்துக்கான பொதுத் தேர்வு குறித்த, வினாக் கட்டமைப்பான, 'புளூபிரின்ட்' வெளியிடப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது; அதனால், எந்த முறையில் கேள்விகள் இடம் பெறும் எனத் தெரியாமல், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
No comments:
Post a Comment