சென்னை மாநகர பேருந்துகளில் வரும் 8 ஆம் தேதி வரை இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இப்போது இயல்பு வாழ்க்கை படிப்படியாகத் திரும்பி வருகிறது. மக்கள் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பும், இந்த வேளையில் மக்கள் உள்ளூர் பயணங்கள் மேற்கொள்ளும் அவசியம் ஏற்படும்.
எனவே, இதற்கு வசதியாக சனிக்கிழமை (டிச.5) முதல் வரும் 8 ஆம் தேதி வரை நான்கு நாள்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்யும் பயணிகளிடம் இருந்து கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது. இந்த நான்கு நாள்களும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் கட்டணம் ஏதுமின்றி மக்கள் பயணம் செய்யலாம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment