மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் 10 ஆண்டுகளுக்கு ஒருல் 7வது ஊதியக் குழு நியமிக்கப்பட்டது. இதில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விவேக் ராய், பொருளாதார நிபுணர்கள் ரதின் ராய், மீனா அகர்வால் ஆகியோர் இடம்பெற்றனர். இந்த கமிஷனின் 900 பக்க அறிக்கை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் கடந்தவாரம் தாக்கல் செய்யப்பட்டது. தன் அறிக்கையில் ஏகப்பட்ட சீர்த்திருத்தங்களை முன்மொழிந்திருக்கிறது 7வது ஊதியக் குழு. மிகவும் குறிப்பிடத்தக்க இரண்டு சீர்திருத்தங்கள்... பணித்திறன் ஊதியம், மனைவி இல்லாத ஆண் ஊழியர்களுக்கு தங்கள் குழந்தையைப் பராமரிக்க இரண்டு ஆண்டுகள் விடுமுறை.
ஆண்களுக்கும் குழந்தைப் பராமரிப்புக்கான விடுமுறையை அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது, தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்கள். அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது, ஊதியக் குழு. ஆண்களுக்கான குழந்தை பராமரிப்பு விடுமுறை பரிந்துரையை வரவேற்கும் அரசு ஊழியர்கள், பணித்திறன் ஊதிய முறையை எதிர்க்கிறார்கள்.
அதென்ன பணித்திறன் ஊதிய முறை..?
அரசு அலுவலகம் என்றால் ஆமை வேகத்தில் தான் இயங்கும் என்பது பொதுக்கருத்தாக மாறிவிட்டது. ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்துவிட்டு, பாதி ஆயுளை அதற்காக அலைந்து திரிந்தே தொலைத்தவர்கள் ஏராளம். ‘அரசு வேலையில் சேர்ந்து விட்டோம், இனி சம்பளம், இங்கிரிமென்ட் வந்துவிடும். வேலை பார்த்தால் என்ன, பார்க்காவிட்டால் என்ன’ என்ற மனோபாவம் சில அரசு ஊழியர்களுக்கு இருக்கிறது. இந்த மனோபாவத்தைத்தான் நாட்டின் வளர்சிக்குத் தடையாகச் சுட்டிக்காட்டுகிறது நீதிபதி மாத்தூர் தலைமையிலான 7வது ஊதியக்குழு.
இதற்கு மாற்றாகத்தான் பணித்திறன் ஊதியம் என்ற திட்டம் முன் வைக்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களில் இருப்பதைப் போல, அரசு ஊழியர்களின் பணித்திறன் முழுமையாக கண்காணிக்கப்படும். தங்களுக்கான பணியை திறமையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கும் ஊழியர்களுக்கே சம்பள உயர்வு உள்ளிட்ட பலன்களை வழங்க வேண்டும். சரிவர செய்யாதவர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்ட அத்தனை பலன்களையும் முடக்க வேண்டும்...” என்கிறது ஊதியக் குழு.
இதை பரவலாக மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்கள் வரவேற்கிறார்கள். ‘மக்கள் சாசனப்படி பொதுமக்களுக்கான பணிகள் நடப்பதை இந்த கண்காணிப்பு ஏற்பாடு உறுதிப்படுத்தும்’ என்பது அவர்களின் கருத்து. ஆனால், அரசு ஊழியர்களின் கருத்து வேறுமாதிரி இருக்கிறது. “பெரும்பாலான அரசுத்துறைகளில் பணிகள் தனியாருக்கு தரப்படுகின்றன. உதாரணத்துக்கு, மத்திய பொதுப்பணித்துறை இருக்கிறது. அதில் பெரும்பாலான பணிகளை தனியார்தான் மேற்கொள்கிறார்கள். ஊழியர்கள், தங்களுக்கான வேலை எதுவென்றே தெரியாமல் தவிக்கிறார்கள்.
அஞ்சல்துறை இருக்கிறது. ஒரு போஸ்ட்மேன் ஒருநாளைக்கு 120 கடிதங்களை கொடுத்தாக வேண்டும் என்கிறார்கள். இன்னொரு பக்கம் தனியாருக்கு அஞ்சல்துறையை தாரை வார்க்கிறார்கள். கொரியர் நிறுவனங்கள் பெரு வளர்ச்சி அடைந்துள்ளன. 120 கடிதங்களே அஞ்சலகத்திற்கு வராதபோது போஸ்ட்மேன் எப்படி அத்தனை கடிதங்களைத் தந்து தன் பணித்திறனை நிரூபிக்க முடியும்...?” என்று கேள்வி எழுப்பும் மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் தமிழகப் பொதுச் செயலாளர் துரைபாண்டியன், ஆண்களுக்கான குழந்தைப் பராமரிப்பு விடுமுறை திட்டத்தை வரவேற்கிறார்.
“இந்த ஊதியக் குழுவின் அறிக்கையில் உள்ள ஒரே ஆறுதல், ஆண்களுக்கு கொடுக்கிற குழந்தை பராமரிப்பு விடுமுறை தான். இரண்டு ஆண்டுகள் விடுமுறை என்று அறிவித்துள்ளார்கள். 365 நாட்களுக்கு முழு சம்பளமும், அடுத்த 365 நாட்களுக்கு 80 சதவீத சம்பளமும் கிடைக்கும். இதுவே பெண்களுக்கும் பொருந்தும். முன்பு பெண்களுக்கு இரண்டு வருடங்களிலும் முழு சம்பளம் கொடுத்தார்கள். இப்போது அவர்களுக்கும் ஆண்கள் மாதிரி 365 நாட்கள் முழு சம்பளம், அடுத்த 365 நாட்கள் 80 சதவீத சம்பளம் என்று மாற்றிவிட்டார்கள்...” என்கிறார் துரைபாண்டியன். இதுவரை அமைக்கப்பட்ட அத்தனை ஊதியக் குழுக்களும் சம்பள உயர்வு பற்றியே பரிந்துரைகள் அளித்துள்ளன. 7வது ஊதியக் குழு காலத்தின் தேவைக்ேகற்றவாறு சீர்த்திருத்தங்களையும் உள்ளடக்கி பரிந்துரைகளை வழங்கி உள்ளது. தனியார் நிறுவனங்களைப் போன்றதாகவே பல பரிந்துரைகள் இருப்பதால் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்த தயாராகி வருவதும் குறிப்பிடத்தகுந்தது.
"பணியை திறமையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கும் ஊழியர்களுக்கே சம்பள உயர்வு உள்ளிட்ட பலன்களை வழங்க வேண்டும். சரிவர செய்யாதவர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்ட அத்தனை பலன்களையும் முடக்க வேண்டும் என்கிறது ஊதியக் குழு"முறை மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். 6வது ஊதியக் குழு பரிந்துரைகள் கடந்த 2006, ஜனவரியில் அமல்படுத்தப்பட்டது.
No comments:
Post a Comment