ஜாக்டோ சார்பில் இன்று நடக்கும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதால், பனமரத்துப்பட்டி யூனியனில் உள்ள, 41 பள்ளிகளின் சாவியை, தலைமையாசிரியர்கள் நேற்று உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
கோரிக்கையை வலியுறுத்தி, ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழு, ஜாக்டோ சார்பில், இன்று, பள்ளி ஆசிரியர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர் என, அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம், பனமரத்துப்பட்டி யூனியனில், 50 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், 277 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை, பனமரத்துப்பட்டி உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில், பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இதில், 41 பள்ளி தலைமை ஆசிரியர்கள், இன்று நடக்கும் ஸ்டிரைக்கில் கலந்து கொள்வதாக கூறி, பள்ளியின் சாவியை, உதவி தொடக்க கல்வி அலுவலரிடம் ஒப்படைத்தனர். ஆசிரியர்களின் இந்த நடவடிக்கையால், பனமரத்துப்பட்டி, மல்லூர், கம்மாளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, 41 பள்ளிகள், இன்று செயல்படாது என, தெரிகிறது.
ஆனால், நெய்க்காரப்பட்டி, ஜருகுமலை, பெரமனூர், மலங்காடு, அரசமரத்து காட்டூர், ஏர்வாடி வாணியம்பாடி, தும்பல்பட்டி, தாசநாயகன்பட்டி, காந்திபுரம் ஆகிய, ஒன்பது பள்ளிகளின் சாவிகளை, ஏ.இ.இ.ஓ., அலுவலகத்தில் ஒப்படைக்கவில்லை. அதனால் இந்த, ஒன்பது பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஸ்டிரைக்கில் கலந்து கொள்ளாமல், வழக்கம் போல் பள்ளியை திறப்பர் என, தெரிகிறது. பணி ஓய்வு பெறும் நிலையில் இருக்கும், ஒன்பது பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஸ்டிரைக்கில் கலந்து கொள்ளாமல், பள்ளியை திறக்கின்றனர். ஆனால், ஒன்பது பள்ளிகளில் பணிபுரியும் மற்ற ஆசிரியர்கள், ஸ்டிரைக்கில் கலந்து கொள்ள உள்ளதாக, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment