இதய ஆப்பரேஷனுக்கு பல லட்சங்கள் செலவு செய்து இதய அடைப்புகளை நீக்குகிறோம், மேலும் ஆப்பரேஷன் முடிந்தவுடன் பழையபடி ஆரோக்கியத்திற்கு செல்வதில்லை உடல் பலவீனமாக்கப்படுகிறது. இதுவே இன்றைய நவீன மருத்துவம். நம் முன்னோர்கள் சர்வசாதாரணமாக இப்படி பட்ட நோய்களை தீர்க்க நம் சமயலறையிலேயே இயற்கை மருந்து வகைகளை பொக்கிஷமாக அளித்து சென்றுள்ளனர்.
ஆனால் இந்த அவசர உலகில் அதையெல்லாம் தெரிந்துக்கொள்ள நாம் தயாராக இல்லை. இதய நோய்க்கு நம் வீட்டில் கிடைக்கும் பொருள்களிலிருந்து எப்படி தீர்வுகாண்பது என்று பார்ப்போம்.
சீரகம் அடைப்புகளை நீக்ககூடிய குணங்களைக்கொண்டது இரத்த நாளங்களிலே கொழுப்பு சேர்ந்து அடைப்பு ஏற்பட்டு இரத்த ஓட்டம் தடைப்படுகிறது. இதனாலேயே நெஞ்சுவலி ஏற்படுகிறது. சீரகத்தை சாப்பிடும் போது இரத்தத்தை உறைய செய்யாமல் நீர்மைப்படுத்துகிறது. இரத்தநாளங்களில் சீராக செல்ல உதவுவது மட்டும்மல்லாமல் இரத்தநாளங்களிலே உள்ள அடைப்புகளையும் கரைத்துவிடுகிறது. தினம்தோறும் மூன்று விரல்களால் சீரகத்தை எடுத்து (கட்டை விரல்,நடுவிரல் மற்றும் சுட்டுவிரல். இந்த மூன்று விரல்களால் எவ்வளவு சீரகம் வருமோ அந்த அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்) அதை நீரிலே விட்டு காய்ச்சி காலையில் வெரும் வயிற்றில் அருந்திவர இரத்த அடைப்புகள் போகும்.
வெங்காயத்தில் இரத்தத்தை நீர்மைப்படுத்தும் சக்தி இருப்பதோடு கொழுப்பை கரைக்ககூடிய அற்புதமான ஆற்றல் வெங்காய்த்திற்கு இருக்கிறது. தினம்தோறும் 25 முதல் 50 கிராம் வெங்காயத்தை எடுத்துக்கொள்வதால் அதில் 150 கிராம் இரத்தத்தை கரைக்ககூடி ஒரு சத்து இருக்கிறது இந்த சத்தின் பயன் இதயத்திலிருக்கும் வீக்கத்தை போக்ககூடியது இதயத்தில் இருக்ககூடிய அடைப்பை போக்ககூடியது. பச்சை வெங்காயத்தை தினம்தோறும் மத்திய உணவிலே சேர்த்துக்கொண்டால் இதயத்தில்லுள்ள அடைப்புகள் கரைக்கப்படும்.
பூண்டும் இதய அடைப்பை கரைக்கும் குணமுடையது தினம்தோறும் பாலிலே 5 பல் பூண்டு சேர்த்து அருந்த இரத்த அடைப்பு நீக்கப்படுகிறது.
No comments:
Post a Comment