பள்ளிக்கல்வித்துறைச் செயலர் மதிப்புமிகு சபிதா அவர்கள் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநருடன் இன்று மாலை அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இதற்காக தொடக்கக்கல்வி இயக்குநர் அவசரமாக சிவகங்கையிலிருந்து சென்னை புறப்பட்டார். ஆலோசனை கூட்டம் நிறைவடைந்த சிறிது நேரத்தில் ஜேக்டோ உயர்மட்ட குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு வந்தது. நாளை பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பேச்சு வார்த்தையில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுச் செயலாளர் (பொறுப்பு) திரு.செல்வராஜ் அவர்களும் அவசர பயணமாக சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.
அதேபோல் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் திரு.இரா. தாஸ் அவர்கள் மும்பையிலிருந்து அவசர பயணமாக நாளை சென்னைக்கு விரைகிறார். பள்ளிக் இயக்குநர் அளவிலான பேச்சுவார்த்தைக்கு பின்னர் நாளை மறுநாள் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மதிப்புமிகு.சபிதா அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment