Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, October 11, 2015

    பி.எட்., கல்லூரி 2ம் கட்ட கலந்தாய்வு பட்டியல் அறிவிப்பு

    பி.எட்., கல்லுாரிகளில் காலியாக உள்ள, 777 இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும், 21 கல்வியியல் கல்லுாரிகளில், 1,777 பி.எட்., இடங்களை நிரப்ப முதற்கட்ட கலந்தாய்வு நடந்தது. இதில், 1,000 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.


    மீதமுள்ள, 777 இடங்களை நிரப்ப, சென்னை, லேடி வெலிங்டன் கல்லுாரி மூலம், இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதற்கான 
    பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.வரும், 14ம் தேதி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்தினர் மற்றும் கணிதத்தில் பெண்கள் மட்டும் பங்கேற்கலாம். 

    வரும், 15ம் தேதி இயற்பியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் வேதியியல் பாடங்களுக்கும்; 16ம் தேதி தமிழ், ஆங்கிலம், புவியியல், வரலாறு, பொருளியல், கணினி அறிவியல், இல்ல அறிவியல் மற்றும் வணிகவியல் பாடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படும்.

    No comments: