15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆசிரியர்கள் வியாழக்கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ( ஜாக்டோ) சார்பாக தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி வியாழ்ககிழமை தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், ஆறாவது ஊதியக்குழுவில் மத்திய அரசில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறத ஊதியத்தை போல் தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும், தாய்மொழி தமிழ்பாடத்தை கடைசியாக வைத்துள்ள அரசாணை எண் 266 திருத்தம் செய்து தமிழ்பாடத்தை முதல் பாடமாக வைக்க வேண்டும், 6வது ஊதியக்குழுவில் நடுவண் அரசு வழங்கியுள்ள அனைத்து படிகளையும் தமிழக அரசு ஆசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment