எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேருவதற்காக இதுவரை 24 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப விநியோகம் கடந்த 11-ஆம் தேதி தொடங்கியது.
நான்கு நாள்கள் முடிவில் தமிழகத்தில் இதுவரை 24,606 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. சென்னை மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர்த்து இதுவரை 6,212 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பிற 16 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 18,394 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் இதுவரை 3,800 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org மூலமும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்களை மே 28-ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி மே 29 என தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment