Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, May 15, 2015

    தாயின் பேச்சு' குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும்


    தாயின் பேச்சு குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.பொதுவாக குழந்தைகள் விளையாடி மகிழ அழகிய பொம்மைகள், விளையாட்டு சாதனங்கள் மற்றும் வீடியோ கேம்கள் போன்றவற்றை பெற்றோர் வாங்கி கொடுக்கின்றனர். அவை அவர்களின் அறிவாற்றலை வளர்க்கும் என நம்புகின்றனர். 

    ஆனால் இவற்றைவிட குழந்தைகளிடம் தாய் தொடர்ந்து பேச்சு கொடுத்தாலே போதும், குழந்தையின் மூளை வளர்ச்சி அடைந்து அறிவுத்திறனும் வளரும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. 

    லண்டனில் உள்ள வடமேற்கு பல்கலைக்கழ கத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இதுபற்றி ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அவர்கள் பிறந்த 3 மாதமே ஆன 50 குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தினார்கள். 

    அந்த குழந்தைகளிடம் அவர்களின் தாய்மார்களை அடிக்கடி பேச்சு கொடுக்கும்படி தெரிவித்தனர். மேலும், மீன், மாடு போன்றவற்றின் படங்களை காட்டி அவற்றின், பெயர்களை கற்றுக் கொடுக்கும்படியும் வலியுறுத்தப்பட்டது. 

    அவர்கள் கொடுத்த பயிற்சியின்படி 3 மாத குழந்தைகள் படங்களை பார்த்து அவற்றின் பெயர்களை உச்சரிக்க தொடங்கினர். மேலும் பல படங்களின் மூலம் அவற்றின் பெயர்களை தெரிவித்தனர். 

    இந்த ஆய்வின் மூலம் குழந்தைகளிடம் தாய்மார்கள் பேச்சு கொடுத்தாலே போதும், குழந்தைகளின் அறிவுத்திறன் வளரும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
    -Ramaraj

    No comments: