அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் போராட்டம் நடத்தினாலே அது ஏதோ ஒரு வகையில் பொதுமக்களால் விமர்சிக்கப்படுகிறது. அது மக்கள் மத்தியில் ஊழியர்களைப் பற்றிய தவறான எண்ணம் செய்கிறது. போராட்டம் என்பது ஒருவர் அரசு ஊழியரோ அல்லது கூலித் தொழிலாளியோ தனக்கு ஒரு பாதிப்பு எனில் அதை போராடித்தான் பெற வேண்டியுள்ளது இதை யாரும் மறுக்க முடியாது.
ஒரே வேலை ஆனால் மாறுபட்ட ஊதியம் என்பதை எந்த மனச்சாட்சி உள்ளவரும் ஆதரிக்கமாட்டார் அது தான் தற்போது ஆசிரியர்கள் போராடக் காரணமாக உள்ளது என்பதை அறியும் முன்பு விமர்சிப்பது நலமல்ல. மேலும் தன் வாழ்வாதாரப் பிரச்சனையான ஓய்வூதியப் பலன்களை வழங்காமல் எங்களுடைய ஊதியத்தில் பிடித்தம் செய்து ஏதோ ஒரு பங்குச்சந்தையில் முதலீடு செய்து ஊழியர்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவே போராடுகிறார்கள் என்பதையும் அறிந்து விமர்சிக்க வேண்டும் என்பது தான் தர்மமாகும். இதுவரை பணியில் இருந்து இறந்தவர்கள் எவர்க்கும் அவரது ஊதியத்தில் பிடித்தம் செய்து முதலீடு செய்த பணம் என்ன ஆனது என்ற தகவல் கூட வழங்கவில்லை என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். மாறாக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராடினாலே அது ஊதிய உயர்வுக்குத்தான் என்பதை இனி வரும் காலங்களில் தவிர்த்து என்ன காரணத்திற்காய் போராடுகிறார்கள் என்பதை முழுவதும் தெரிந்து கொண்டு விமர்சிப்பதே அறிவார்ந்த செயலாக இருக்க முடியும்.
No comments:
Post a Comment