Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, June 13, 2013

    பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டதா.... விவரம் கேட்கும் பள்ளிக் கல்வித்துறை

    தமிழகம் முழுவுதும் பள்ளிகள் திறந்த நாளில், பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்ட விபரங்களை, பள்ளிக்கல்வித்துறை சேகரித்து வருகிறது. பாடப்புத்தகங்கள் மற்றும் இலவச பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட உள்ளது.
    தமிழகத்தில் ஜூன் 10ல் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதை தொடர்ந்து, அந்தந்த மாவட்டங்களுக்கு தேவையான புத்தகங்கள், நோட்டுகள்,புத்தகப்பை, சீருடை உட்ளிட்ட பொருட்கள் குறித்து விபரங்கள் பெறப்பட்டன. தேவையான பொருட்களை, அந்தந்த பகுதி கிடங்குகளில் இருந்து,பள்ளிகள் திறக்கும் முன்பே அனுப்பி வைக்கப்பட்டன.

    இந்நிலையில், புத்தகங்கள், இலவசப்பொருட்கள் வழங்கிய விபரங்களை,அந்தந்த முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலமாக,பள்ளிக்கல்வித்துறை சேகரித்து வருகிறது. மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள், இலவச பொருட்களை வழங்காத அதிகாரிகளிடம், அதற்கான விளக்கமும் கேட்கப்பட உள்ளன.

    No comments: