கல்வி உதவித்தொகை கையாடல் விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இதுவரை பணியில் சேர்த்துக் கொள்ளப்படாமல் உள்ள தலைமையாசிரியர்கள் உள்ளிட்ட 7 ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு முன் மீண்டும் பணிவாய்ப்பு அளித்திட வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
ஆதிதிராவிட நலத் துறை சார்பில் சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் கல்வி உதவித்தொகையை கையாடல் செய்ததாக நாமக்கல் மாவட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் என 77 பேர் கடந்தாண்டு ஜூன் மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
பல்வேறு விசாரணைகளுக்குப் பிறகு மாணவர்களின் கல்வி நலன் கருதி, அவர்களில் 70 பேர் கடந்த ஜனவரி மாதம் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இதற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் திரு .செ.முத்துசாமி அவர்களின் பணி மகத்தானது.இருப்பினும், அவர்களது கையாடல் விவகாரம் தொடர்ந்து விசாரணையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், 70 ஆசிரியர்கள் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்ட நிலையில், புதுச்சத்திரம், மோகனூர், கபிலர்மலை ஒன்றியங்களில் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் என 7 பேர் இதுவரை பணியில் சேர்த்துக் கொள்ளப்படாமல் உள்ளனர். இந்த ஆசிரியர்களுக்கு 2013-2014ஆம் கல்வியாண்டு தொடக்கப் பள்ளி ஆசிரியர் பொது கலந்தாய்வு மாறுதலுக்கு முன் மீண்டும் பணி வாய்ப்பளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
எந்தவொரு துறையிலும் குற்றம் செய்பவர்களை ஓராண்டு காலம் பணியிடை நீக்கம் செய்து தண்டிப்பதில்லை. தவிர, பணியிடை நீóக்கம் என்பது விசாரணை வசதிக்காக ஏற்படுத்துவது. அந்த பணியிடை நீக்க காலமே ஆசிரியர்களுக்கு தண்டனையாக அமைந்துவிடக்கூடாது.
எனவே, ஓராண்டாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், அரசு விசாரணைக்கு பாதகம் ஏற்படாத வகையிலும், பள்ளி தொடங்கும் முன் பணியில் சேர்த்துக் கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக்கொள்ளப்படுகிறது

No comments:
Post a Comment