தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியம் மற்றும் நர்சரி உதவி / கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணிபுரிபவர்களின் விவரங்களை 15.06.2013 அன்றுள்ளவாறு அளிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணிபுரியும் அலுவலகம், தற்பொழுது பணிபுரியும் ஒன்றியம் / அலுவலகங்கத்தில்
எத்தனை ஆண்டுகளாக பணிபுரிகிறார் என்ற விவரம், பிறந்த தேதி, முதன்முதலாக அலுவலராக பணியேற்ற நாள் மற்றும் பணிபுரியும் ஒன்றியம், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்த ஒன்றியம் போன்ற விவரம் முதல் படிவத்திலும், 2013-14ஆம் கல்வியாண்டில் ஓய்வுபெறவுள்ள அலுவலர்களின் பெயர், பதவி, ஒன்றியம் / அலுவலகம், பிறந்த தேதி, ஓய்வுபெறும் தேதி, இதற்குமுன் உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணிபுரிந்த ஒன்றியம் மற்றும் மாவட்டம் போன்ற விவரங்கள் இரண்டாவது படிவத்திலும் பதிவு செய்து 21.06.2013 அன்று தனிநபர் மூலம் தொடக்கக் கல்வி இயக்ககத்தில் ஒப்படைக்க அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment