Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, June 8, 2013

    ஜூனில் இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு

    இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பது  தொடர்பாக, அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    அறிக்கையில், " மார்ச் 2013 இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வில், பள்ளித் தேர்வர்கள், தனித் தேர்வர்களில், அறிவியல் பாடம் உட்பட தோல்வியுற்ற அனைத்துப் பாடங்களிலும் தேர்வெழுத ஒரு வாய்ப்பாக,  ஜுன் 2013 சிறப்பு துணைத் தேர்வெழுத அனுமதி அளிக்கப்படுகிறது. 

    மார்ச் 2013 தேர்வில் பள்ளி மாணவர்கள் மற்றும் நேரடித் தனித் தேர்வர்கள், அறிவியல் பாடத்தில், செய்முறைப் பயிற்சிக்குச் செல்லாமல், அறிவியல் பாட செய்முறைத் தேர்வினை எழுத முடியாமல் போனவர்கள் அனைவரும்   சிறப்பு துணைத் தேர்வுத் திட்டத்தில் விண்ணப்பித்துப் பயன்பெற அறிவுறுத்தப்படுகிறது.

    ஏற்கனவே தேர்வெழுதித் தோல்வியுற்றவர்கள், மார்ச் 2013 தேர்வினை எழுதி, அறிவியல் பாடத்தில் செய்முறைப் பயிற்சிக்குப் பதிவு செய்யாததால், அறிவியல் பாட கருத்தியல், செய்முறைத் தேர்வு எழுத முடியாதவர்களும், தற்போது தக்கல் திட்டத்தில் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.

    மார்ச் 2013 தேர்வில் ஓரிரு பாடங்களில் மட்டும் தேர்வெழுதி, இதர பாடங்களில் தேர்வெழுதாதவர்களும், தேர்வுக்கு அனுமதிக்கப்படாதவர்களும்  (அறிவியல் பாடம் உட்பட)  சிறப்புத் துணைத்  தேர்விற்கு  விண்ணப்பிக்கலாம்.

    மார்ச் 2013 தேர்வில் அறிவியல் பாடத்தில் கருத்தியல் தேர்வு மட்டும் எழுதி   செய்முறைத்  தேர்வெழுதாதவர்கள், தற்போது அறிவியல் பாடத்தில் கருத்தியலில் தேர்ச்சி பெற்றிருந்தாலோ   அல்லது    தோல்வி அடைந்திருந்ததலோ,  அவர்கள் ஜுன் 2013 சிறப்புத் துணைத் தேர்வில் கருத்தியல் மற்றும் செய்முறைத் தேர்வு இரண்டினையும்  எழுத வேண்டும்.

    மேற்படி    ஜுன் 2013 சிறப்புத் துணைத் தேர்வினை   தக்கல் திட்டத்தில் தேர்வெழுத விரும்பும் தனித் தேர்வர்கள்,   அறிவியல் பாடத்தில் தேர்வெழுதுவதற்கு ஏதுவாக  அறிவியல் செய்முறைப் பயிற்சி பெற சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகத்தை அணுகிப்  பயிற்சி  பெற்றுக் கொள்ள வேண்டும்.  அவர்களுக்கு செய்முறை பயிற்சிக்கான தேதி மற்றும் செய்முறைத் தேர்விற்கான தேதி பின்னர் வெளியிடப்படும். 

    ஜுன் 2013 சிறப்புத் துணைத் தேர்வுக்கான தக்கல் திட்டத்தில் விண்ணப்பிப்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்படுகிறது." இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.    

    No comments: