Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, June 9, 2013

    அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்காமல் இழுத்தடிப்பு: பள்ளி ஆசிரியர்கள் கடும் அதிருப்தி - நாளிதழ் செய்தி

    எருமப்பட்டி யூனியனுக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, மூன்று மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை, உதவி தொடக்க கல்வி அலுவலகம் மூலம் வழங்காமல், இழுத்தடிப்பு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி யூனியனுக்கு உட்பட்ட பகுதியில், 53 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. அவற்றில், 235 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
    அவர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாகியும், இதுவரை வழங்காமல் உள்ளது.இதுபற்றி, எருமப்பட்டி உதவி தொடக்க கல்வி அலுவலக அதிகாரிகளிடம், ஆசிரியர்கள் கேட்டபோது, முறையான பதில் அளிக்கவில்லை. அதனால், பள்ளி ஆசிரியர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.தொடக்கப் பள்ளி ஆசிரியர் ராமராசு கூறியதாவது:ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். இந்தாண்டுக்கான அகவிலைப்படி, ஏப்ரல் மாதம் எட்டு சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வு, ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது. எனவே, மூன்று மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை, ஊதியத்துடன் சேர்ந்து உடனடியாக வழங்கும்படி, அரசு உத்தரவிட்டது.
    அதன்படி, மாநிலம் முழுவதும், அனைத்து உதவி தொடக்க கல்வி அலுவலகம் மூலம் அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்பட்டது. எனினும், எருமப்பட்டி உதவி தொடக்க கல்வி அலுவலகம் மூலம் மட்டும், அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது. இதுபற்றி உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் கேட்டால், ஊழியர் பற்றாக்குறை என்பது உள்ளிட்ட ஒரு சில காரணங்களை கூறி தட்டிக் கழிக்கின்றனர். ஏதோ உள்நோக்குடன் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கவனம் செலுத்தி, அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

    1 comment:

    Anonymous said...

    Sir dharmapuri dt pennagaram blockla two yearsa pay fixation pf el surrender munanumathi ela varsathukum epavathu nadakum salaryae inga arrera vangaranga ipa pota DA thanae inga athumila vanthudum dnt feel