தமிழகத்தில் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்படாததால் கல்வித் துறையில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையில் 100 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டது.
பொதுவாக பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாக இப்பட்டியல் வெளியிடப்பட்டால்தான் மாணவ, மாணவிகள் இப்பள்ளிகளில் சேர வாய்ப்பு ஏற்படும். ஆனால் தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக இப்பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை. எஸ்.எஸ்.எல்.சி மார்க் ஷீட் நேற்று முதல் வழங்கப்பட்டு பிளஸ் 1 மாணவர் சேர்க்கையும் ஆரம்பமாகியுள்ளது. ஆனால் உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்படாததால் இதுவரை உயர்நிலைப் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகள் வேறு பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவுக்கு அரசு காரணமாக இருப்பதோடு தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பதாகவும் உள்ளதாக ஆசிரிய சங்கத்தினர் புகார் கூறுகின்றனர்.
மேலும், உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஒன்பது முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் அறிவிக்கப்பட்டது. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்படாத நிலையில் இந்த ஆசிரிய நியமனங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள், 100 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே, தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியலை வெளியிட்டு உடனடியாக இரண்டாவது கவுன்சிலிங்கை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் மனோகரன் கூறும் போது, ""தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்படாததால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலதாமதத்தால் சிறப்பு துணை தேர்வு எழுதி தேர்ச்சி பெறும் மாணவர்கள் மட்டுமே தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் சேர முடியும். ஒருபுறம் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் கல்வித் துறை மறுபுறம் இச்சதவீதம் குறைவதற்கும் காரணமாக உள்ளது. எனவே, தரம் உயர்ர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியலை வெளியிட்டு உடனடியாக இரண்டாவது இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்த வேண்டும்'' என்றார்.

No comments:
Post a Comment