Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, June 21, 2013

    நர்சரி பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம் தேவை: ஐகோர்ட் அதிரடி

    "நர்சரி பள்ளிகளுக்கு, அரசின் அனுமதி பெற வேண்டும்" என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த கொண்டு வரப்பட்ட, தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, நர்சரி பள்ளிகள் உள்ளிட்ட ஒவ்வொரு பள்ளியும், அங்கீகாரம் பெற வேண்டும் என சென்னை ஐகோர்ட் வலியுறுத்தியுள்ளது.
    மழலையர் பள்ளிகள் கோவை, புதிய சித்தாபுதூரில் உள்ள, ஆச்சாரியா கல்வி அறக்கட்டளையின், நிர்வாக அறங்காவலர், டாக்டர் அரவிந்தன் தாக்கல் செய்த மனு: கோவையில், கணபதி, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம் பகுதிகளில், மூன்று மழலையர் பள்ளிகள் துவங்கினோம். ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தான், சேர்க்கிறோம்.

    அரசிடம் அங்கீகாரம் பெறுவதற்கு, விண்ணப்பம் அளிக்கும்படி, கோவையில் உள்ள, மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, கடந்த ஆண்டு, "நோட்டீஸ்" அனுப்பினார். அதன்படி, விண்ணப்பிக்கப்பட்டது. இருதரப்புக்கும் இடையில், தொடர் கடிதப் போக்குவரத்து இருந்தும், விண்ணப்பம் இன்னும் நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில், "எங்கள் மூன்று பள்ளிகளும், அரசின் அனுமதி பெறவில்லை" என தொடக்க கல்வித்துறை, பத்திரிகைகளில் அறிக்கை வெளியிட்டது. இலவச கட்டாய கல்விச் சட்டத்தின்படி, அங்கீகாரம் பெற தவறி விட்டது போல், கூறப்பட்டு உள்ளது.

    இந்தச் சட்டம், நர்சரி பள்ளிகளுக்கு பொருந்தாது. "நர்சரி பள்ளிகளை மூட வேண்டும்" என, தொடக்கக் கல்வி இயக்குனர், இம்மாதம், 10ம் தேதி பிறப்பித்த உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். கட்டாய கல்வி சட்டப் பிரிவை, பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் கே.துரைசாமி, "கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க, தொடக்கக் கல்வி இயக்குனருக்கு அதிகாரமில்லை; தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, ஏற்கனவே சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் மீது, அங்கீகாரம் வழங்குமாறு, அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்றார்.

    அரசு தரப்பில், சிறப்பு அரசு பிளீடர் கிருஷ்ணகுமார், "அரசின் அனுமதி பெறாமல், நர்சரி பள்ளிகளை, மனுதாரர் துவக்கியுள்ளார். அங்கீகாரம் கோரிய விண்ணப்பம், திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. மீண்டும் விண்ணப்பம் சமர்பிக்க, தவறியுள்ளனர். எனவே, விண்ணப்பத்தை பரிசீலிக்க, சந்தர்ப்பம் எழவில்லை" என்றார்.

    கல்வி அதிகாரி மனுவை விசாரித்த, நீதிபதி சசிதரன் பிறப்பித்த உத்தரவு: அங்கீகாரத்துக்கு விண்ணப்பம் சமர்பிக்குமாறு, மனுதாரரை, மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி, ஆவணங்களுடன் சேர்த்து விண்ணப்பத்தை, மனுதாரர் அளித்திருப்பது தெரிகிறது.

    அதன்பின் தான், தொடக்கக் கல்வி இயக்குனர், நர்சரி பள்ளிகளை மூடுமாறு
    உத்தரவிட்டுள்ளார். தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்த, 1973ம் ஆண்டு, சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் கீழ், தொடக்கக் கல்விக்கு முந்தைய கல்வியும் (நர்சரி) வருகிறது. கல்வி நிறுவனங்களை துவங்க அனுமதி பெறுவதற்கு விண்ணப்பிப்பது உள்ளிட்ட விஷயங்களை, இச்சட்டம் உள்ளடக்கியுள்ளது.

    தமிழகத்தில், காளான்கள் போல், நர்சரி பள்ளிகள் முளைக்கின்றன. மனுதாரர் கூறுவது போல், நர்சரி பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற தேவையில்லை என்பதை ஏற்றுக் கொண்டால், ஏராளமான நர்சரி பள்ளிகள் உருவாகும் சூழ்நிலை ஏற்படும். அவற்றை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

    நர்சரி பள்ளி மாணவர்கள், உயர் வகுப்புகளுக்கு செல்வர். நர்சரி பள்ளிகளில், தேவையான வசதிகள் இருக்க வேண்டும். கும்பகோணத்தில் நடந்த துயர சம்பவம் போல், சில சம்பவங்களை, இந்த மாநிலம் கண்டுள்ளது. அத்தகைய சம்பவங்கள் நடக்கக் கூடாது.

    கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த தான், தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம், கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, நர்சரி பள்ளிகள் உள்ளிட்ட ஒவ்வொரு பள்ளியும், அங்கீகாரம் பெற வேண்டும். நர்சரி பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க, அரசக்கு அதிகாரமில்லை என்கிற, மனுதாரரின் வாதத்தில் தகுதியில்லை.

    தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, அனுமதி பெற வேண்டும் என்பதை, மூத்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். எனவே, நர்சரி பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெறுவதற்காக, தேவையான ஆவணங்களுடன், கோவை மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரியிடம், மனுதாரர் விண்ணப்பிக்க வேண்டும்.

    ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால், அதை தகுதி அடிப்படையில், சட்டப்படி பரிசீலித்து, பைசல் செய்ய வேண்டும். 30 நாட்களுக்குள் அந்த நடவடிக்கையை, மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி முடிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி சசிதரன் உத்தரவிட்டுள்ளார்.

    No comments: