Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, June 9, 2013

    குழந்தைகளின் மனச் சோர்வையும் தளர்ச்சியையும் போக்கும் வைட்டமின் “டி”

    உங்கள்குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே பொத்திபொத்தி வளர்க்காதீர்கள், வீட்டைவிட்டு வெளியே அனுப்பி விளையாட விடுங்கள், பகலில் அதிக நேரம் வெயிலில் நடக்கட்டும் அல்லது ஓடட்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பிரிட்டனில் கூறுகிறார்கள். என்ன காரணம்?
    வெயிலில் குழந்தைகள் அதிக நேரம் இருந்தால் சூரிய ஒளி மேனியில் பட்டு உடலுக்குத் தேவைப்படும் வைட்டமின் “டி’யை ஈர்க்கும். இதனால் உடலும் மனமும் ஆரோக்கியப்படும். “என்ன மனதா?’ என்றா கேட்கிறீர்கள். ஆம் மனதுதான்.

    வைட்டமின் “டி’யால் தோலுக்கு நல்லது என்று மட்டும்தான் இதுவரை கூறிவந்தார்கள். இப்போதுதான் அது மனச் சோர்வையும் தளர்ச்சியையும்கூட போக்கும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

    9 வயது முதல் 13 வயது வரையிலான 2,700 சிறார்களை ஆய்வு செய்தார்கள். அவர்களுடைய உடலில் வைட்டமின் “டி’ எந்த அளவு இருக்கிறது, அவர்கள் அன்றாடம் எத்தனை மணி நேரம் வெயிலில் இருந்தார்கள் என்று கணக்கிட்டு ஒப்பு நோக்கினார்கள். அதிக நேரம் வெயிலில் இருந்து விளையாடிய, வேலை செய்த சிறுவர்களுக்கு அந்த அளவு அதிகம் இருந்தது.

    அதே போல மனச் சோர்வால் பாதிக்கப்பட்டு சுறுசுறுப்பில்லாமல் எதையோ பறிகொடுத்தார் போல இருந்த குழந்தைகளைப் பரிசோதித்தபோது வைட்டமின் “டி’ அளவு குறைவாக இருந்தது தெரிந்தது.

    வைட்டமின் “டி’யிலேயே 2 வகை உண்டு. டி-2, டி-3 என்று இரண்டு. அதில் டி-3 குறைவாக இருந்தால் மனச் சோர்வும் தளர்ச்சியும் ஏற்படுகிறது. வெயிலில் மட்டும் அல்ல வாளை மீனிலும் வைட்டமின் டி அதிக அளவில் இருக்கிறது. (அதிருஷ்டம் செய்தவர்கள்,அசைவர்கள் )

    1 comment:

    Anonymous said...

    இயற்கையின் அருட்கொடை அளவிடற்கரியது. இயற்கை வழிபாடு சிறந்திருந்த காலத்தில் மக்கள் நலமாகவும் வளமாகவும் வாழ்ந்துள்ளனர்.
    கை கூப்பி தொழுவோம் உண்மையான உலக நாயகனை... (சூரியனை)

    -சபரிஷ்