Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

  Sunday, June 2, 2013

  பத்தாம் வகுப்பு தேர்வும் எதிர்காலமும்

  பள்ளிக்கூடத்தில் படிக்கும்பொழுது விளையாட்டுத்தனம் மட்டுமே மனம் முழுதும் மேலோங்கி இருக்கும். அதுவும் குறிப்பாக மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும்பொழுது ஒரு சிலருக்கு எதிர்காலம் குறித்த பெரும் கனவுகளும்,
  பலருக்கு எதிர்காலம் பற்றிய சிறிதளவு சிந்தனையும் இல்லாமலும் பள்ளிக்காலம் கழியும். சரியான திட்டமிடுதலோ, வழிகாட்டுதலோ இன்றி வாழ்ந்துகொண்டிருக்கும் பருவத்தில் பத்தாம் வகுப்பு வந்தவுடன் சிறிது கலக்கம் வரும்.

  ஏனெனில் அந்த நேரத்தில் சற்று அதிகமாக எதிர்காலத்தைப்பற்றி வீட்டிலும், உறவினர்கள் மத்தியிலும், விபரமான நண்பர்களிடமிருந்தும் பேச்சு வரும். நன்கு படிக்கின்ற மாணவர்கள் எல்லாம் பிளஸ் 1 இல், முதல் மற்றும் இரண்டாம் குரூப் களை தேர்வு செய்வோம் என்றும் பொறியியலாளர்களாக, மருத்துவர்களாக சேவை புரிவோம் என்றும் பெருமிதம் கொள்வர். ஆனால் சரிவர படிக்காத மாணவர்கள் அதிகமான பேர் தேர்வு முடிவுகள் வந்தவுடன் எதிர்காலத்தை தீர்மானம் செய்துகொள்ளலாம் என்று எதிர்காலம் பற்றிய தீர்வை சற்று தள்ளி வைப்பர். ஏனெனில் பதின்பருவ வயதின் எண்ணங்களும், முடிவுகளும் சற்று குழப்பம் மிகுந்தது. அந்த நேரத்தில் சரியான வழிகாட்டுதலின்றி, அசட்டுத்தனமாக எதனையும் எதிர்கொள்வோம் என்ற நம்பிக்கை சரியாக இருக்காது.

  ஒவ்வொருவருக்கும் தனித்துவமான குணங்கள், செயல்பாடுகள் இருக்கும். அதனை கண்டுகொண்டு அதன் படி நம் எதிர்காலத்தை தீர்மானிப்போம் என்று நினைக்கவேண்டும். அப்படி நினைத்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும்? நம் எண்ணங்களுக்கு ஏற்ற துறை சார்ந்த குரூப்பை பிளஸ் 1 இல் படிக்கவேண்டும். ஏற்ற துறை சார்ந்த குரூப்பை பிளஸ் 1 இல் படித்தோம் என்றால் தான். கல்லூரியிலும் விருப்பமான படிப்பை தேர்ந்தெடுப்பது எளிதாகாமியும். இதற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது பத்தாம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்கள்.

  அதிக மதிப்பெண்கள் பெறுவது சிறந்ததுதான் என்றாலும். எண்களின் மேல் கவனத்தைக்கொள்ளாமல் எண்ணிய பிரிவை பிளஸ் 1 இல் எடுக்க வேண்டும் என நினைத்து படிக்க வேண்டும். இதற்கு, குறைவான மதிப்பெண்கள் எடுத்தாலும் போதும் என்பது அர்த்தம் அல்ல. பதற்றம் மிகுந்த தேர்வு நேரத்தை தன்னம்பிக்கை மிகுந்த காலமாக மனதளவில் மாற்றி, அதன் மூலம் அதிக மதிப்பெண்களை பெற வைப்பதற்கான மாற்று வழி இது என்றும் வைத்துக்கொள்ளலாம். அதனோடு கூட எண்ணிய எதிர்காலத்தை அடைவதற்கான கட்டமைப்பு பத்தாம் வகுப்பு தேர்வில் இருந்து தானே தொடங்குகிறது. ஒரு வேளை விருப்பம் இல்லாத குரூப்பை பிளஸ் 1 இல் படித்துவிட்டு பிளஸ் 2 வில் எடுக்கும் மதிப்பெண்களை வைத்து கல்லூரியில் மற்றுமொரு படிப்பை படித்துவிட்டு சம்பந்தமில்லாத வேலைக்கு மகிழ்ச்சியின்றி செல்லும் இன்றைய சூழ்நிலையில், விருப்பமானதை மகிழ்ச்சியுடன், கடினமின்றி படித்து உற்சாகமான வேலை பார்ப்பதுதானே சிறந்தது.

  எதையுமே அதற்குரிய காலம் கடந்த பின் வருத்தப்படுவதுதான் பெரும்பாலோனோரின் பழக்கம். காரணம் அந்த நேரத்தில் நமக்கு சரியான வழிகாட்டுதல் இருந்திருக்காது. ஓரு வேளை நல்ல வழிகாட்டுதல் கிடைத்திருந்தாலும் அதனை பயன்படுத்தியிருக்க மாட்டோம். சரியான வழிகாட்டுதல் என்பது நம்மால் எது எளிதாக, வெற்றிகரமாக செய்ய முடியும் என்பதேயாகும். ஏற்கனவே உங்களில் பலருக்கும் அடுத்து பிளஸ் 1 இல் எந்த குரூப் எடுக்க வேண்டும் பலமான ஆலோசனைகள் கிடைத்திருக்கும். கிடைத்த பல ஆலோசனைகள் தவிர்த்து உங்களுக்குள் வேறு ஏதேனும் முடிவு இருக்கும். ஏதுவானாலும் கலக்கம் கொள்ளாமல், உற்சாகத்தோடு படிக்கவேண்டும். ஏனெனில் இது பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 விற்கான படிப்பு மட்டுமல்ல எதிர்காலத்திற்கான ஒரு எளிய திறவுகோல்.

  "எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
  செய்தற் கரிய செயல்"

  (கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.)

  No comments: