காரைக்காலில், நிலுவையில் உள்ள 3 மாத ஊதியத்தை உடனே வழங்க வலியுறுத்தி, தனியார் பள்ளி முதல்வர் அறை எதிரே ஆசிரியர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூயமரியன்னை மேல்நிலைப்பள்ளி, இது அரசு உதவிப்பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி ஆகும். கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் தான் பள்ளி தொடங்கியது. இந்நிலையில், நிலுவையில் உள்ள 3 மாத ஊதியத்தை உடனே வழங்க வலியுறுத்தி, தனியார் பள்ளி முதல்வர் அறை எதிரே ஆசிரியர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்களின் இந்த திடீர் போராட்டத்தால், வகுப்பு தொடங்கிய ஒரே நாளில் மாணவர்கள் பாடம் கற்க முடியாமல் அவதிக்குள்ளாகினர். ஆசிரியர்களின் நியாமான போராட்டம் குறித்து, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சுமூகமான தீர்வை காண வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:
Post a Comment