Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, June 7, 2013

    ஜூன்2013 தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு : விண்ணப்பிக்க சிறப்பு வாய்ப்பு

    ஜூன் 2013-ல் நடைபெறும் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தனித்தேர்வர்களுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    இது குறித்து அரசத் தேர்வுத் துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு  தனித் தேர்வர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தில் ஜுன் 2013ல்  தேர்வெழுத அனுமதிக்கப்படுகிறார்கள்.

    2013  ஜுன் மாதம் 24 ஆம் தேதி முதல் ஜூலை  11ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு.   தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வெழுத விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதியான  29.04.2013க்குள் விண்ணப்பிக்கத் தவறியவர்கள், தற்போது   சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க  வாய்ப்பளிக்கப்படுகிறது,

    2008-2009-ல் அறிமுகப்படுத்தப்பட்ட  பாடத்திட்டத்திற்கு முன் தேர்வெழுதி தோல்வியுற்றோர், புதிய பாடத்திட்டத்தின் படி, முதலாமாண்டு  7 பாடங்களுக்கும் இரண்டாமாண்டு 7 பாடங்களுக்கும் விண்ணப்பிக்க வேண்டும், இத்திட்டத்தின் கீழ் தொடக்கக்   கல்வி பட்டயத் தேர்வெழுத விண்ணப்பிக்க  விரும்பும் தனித் தேர்வர்கள் உரிய தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1,000 சிறப்பு அனுமதி கட்டணமாக செலுத்த வேண்டும்,தேர்வுக்கட்டண விவரம் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கப்பட்டுள்ளது,

    தேர்வுக்கான வெற்று  விண்ணப்பப் படிவங்களை  10.06.2013 முதல் 12.06.2013 வரை www.tn.gov.in/dge என்ற இணைய தளத்தில் பக்கம்  1 முதல் 6 வரை பதிவிறக்கம் செய்து கொண்டு பக்கம் 4 முதல் 6 வரை உள்ள அறிவுறைகளின்படி பூர்த்தி செய்து கீழ்க்குறிப்பிட்ட  மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 12.06.2013.

    தூத்துக்குடி, மதுரை, நாமக்கல், கோயம்புத்தூர், திருச்சி, சென்னை, தனித்தேர்வர்கள்  பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ஏற்கனவே தேர்ச்சி பெற்ற முதலாமாண்டு, இரண்டாமாண்டு பாடங்களுக்கான அனைத்து மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களை மேற்குறிப்பிட்ட மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 12.06.2013 மாலை 5.45க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்த மாவட்டத்திலேயே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்படுகிறது.

    தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை

    சென்னை நகர தனித்தேர்வர்கள் உட்பட அனைத்துத் தேர்வர்களும் தேர்வுக் கட்டணத்தை, விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட கருவூல செலுத்துச்சீட்டு  மூலமாக அரசுக் கருவூலகங்களில் மட்டுமே செலுத்த வேண்டும் எனத் திட்டவட்டமாக அறிவிக்கப்படுகிறது.

    தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு

    இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து தனித் தேர்வர்களும், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை  விண்ணப்பங்களை சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலேயே உடனடியாகப்  பெற்றுக் கொள்ளலாம். இதர விரிவான விவரங்களுக்கு,  www.tn.gov.in/dge  என்ற இணைய தளத்தில் பக்கம் 4 முதல் 6 வரையிலான அறிவுரைகளை பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    No comments: