வறுமையிலும் ஆத்தூர் மாணவி தேவிஸ்ரீ நன்றாக படித்து மாநில அளவில் இரண்டாவது இடம் பெற்று சாதனை படைத்து உள்ளார்.எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் 52 மாணவ-மாணவிகள் மாநில அளவில் இரண்டாவது இடம் பெற்று உள்ளனர். இதில் 51 பேர் தனியார் பள்ளியில் படித்தவர்கள். ஒரே ஒரு மாணவி மட்டும் அரசு பள்ளியில் படித்தவர். அவரது பெயர் தேவிஸ்ரீ.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் படித்தவர். இவர் 500-க்கு 497 மதிப்பெண் பெற்று உள்ளார். இவரது தந்தை மாதேஸ்வரன் இறந்து விட்டார். தாயார் உமா மகேஸ்வரி ஆத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஸ்கேன் சென்டரில் ஊழியராக பணியாற்றி வருகிறார். தாத்தா-பாட்டி வீட்டில் தங்கி இருந்து படித்தார்.
இவர்களது குடும்பம் வறுமையில் வாடினாலும் சாதனை படைக்க வேண்டும் என்ற வெறியில் படித்ததால் மாநில அளவில் இரண்டாவது இடத்தை பிடிக்க முடிந்ததாக மாணவி தேவிஸ்ரீ கூறினார். டாக்டருக்கு படித்து சேவை செய்வேன் என்றும் அவர் கூறினார்.

No comments:
Post a Comment