Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, August 30, 2017

    போலி சான்றிதழ்: போலீஸ் விசாரணை தீவிரம்!

    வெளி மாநில மாணவர்கள், போலி இருப்பிட சான்றிதழ்கள் சமர்ப்பித்து, எம்.பி.பி.எஸ்., இடம் பெற்றனரா என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தர வரிசை பட்டியல் படி,மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையைதீவிரப்படுத்தி உள்ளனர்.


    தமிழகத்தில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடக்கிறது. இதில், கேரளா மற்றும் புதுச்சேரி மாநில மாணவர்கள் சிலர், போலி இருப்பிட சான்றிதழ்களை சமர்ப்பித்து, அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து, திண்டி வனத்தைச் சேர்ந்த, அரசு வழக்கறிஞர், அம்ஜத் அலி மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த, தீனதயாளன், சென்னை மாநகர போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

    இது குறித்து போலீசார் கூறியதாவது:

    கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், தமிழக மருத்துவ கல்லுாரிகளில் சேர, போலி இருப்பிட சான்றிதழ்களை சமர்ப்பித்து, சட்ட விரோதமாக, மாநில ஒதுக்கீட்டில்,எம்.பி.பி.எஸ்., இடம் பெற்றது தெரிய வந்து உள்ளது.

    அது குறித்து, கேரளாவை பூர்வீகமாக உடைய மாணவி உட்பட, ஒன்பது பேரிடம் விசாரணை நடக்கிறது. இவர்களை போல, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், போலி இருப்பிடம் மற்றும் ஜாதி சான்றிதழ்கள் சமர்ப்பித்து, இடம் பெற்று இருப்பதாக, தீனதயாளன் என்பவர் புகார் அளித்துள்ளார்.

    அதுபற்றி, சி.பி.எஸ்.இ., தர வரிசை பட்டியல் அடிப்படையில், விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    நிரம்பின இடங்கள்

    அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில்,அரசு இடங்களில், பழங்குடியினர் இடம் தவிர்த்து, அனைத்து, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களும் நிரம்பின.

    எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனையில், 24ம் தேதி துவங்கி, நடந்து வருகிறது. ஐந்து நாட்களில், அரசு மற்றும் சுயநிதி அரசு மருத்துவகல்லுாரிகளில் உள்ள, 3,284 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 468 பி.டி.எஸ்., இடங்கள் நிரம்பின.

    இந்நிலையில், நேற்றைய கவுன்சிலிங்கில், ஆதிதிராவிடர் ஒதுக்கீட்டில் இருந்த, எம்.பி.பி.எஸ்.,இடங்கள் நிரம்பின. இந்த பிரிவில், ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரியில், இரண்டு எம்.பி.பி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன.

    பழங்குடியினர் பிரிவில் சில இடங்கள் காலியாக உள்ளன. பி.டி.எஸ்., படிப்பில், ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இடங்களை தவிர, அனைத்து இடங்களும் நிரம்பின. இன்று, ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவு இடங்களுக்கான கவுன்சிலிங் நடைபெறுகிறது. கவுன்சிலிங், செப்., 1ல், நிறைவடைகிறது.

    1 comment:

    Unknown said...

    The King Casino Hotel | Jamul Casino & Spa
    The King 출장샵 Casino Hotel is set 1 casino-roll.com mile novcasino south of worrione Jamul Casino, 1 MPRC Blvd, Jamul, Georgia. View map. This casino offers a variety of gaming https://jancasino.com/review/merit-casino/ options including slots,