Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, May 7, 2015

    தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநில நிர்வாகிகள் SSA மாநில திட்ட இயக்குநருடன் சந்திப்பு


    நேற்று 06.05.2015 அன்று தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநிலத்தலைவர் திரு K.சம்பத் தலைமையில் மாநில நிர்வாகிகள் SSA மாநில திட்ட இயக்குநர் அவர்களைச் சந்தித்து, 1 1/2 மணி நேரம் பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள்:

    1.   500 ஆசிரியர் பயிற்றுநர்களை பள்ளிக்கு பணியிடமாறுதல் செய்ய அரசாணை விரைவில் வெளீயிடு (1500பேருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது)
    2. FTA Rs.1000 மாக உயர்த்தி வழங்கப்படும். 
    3.  900 ஆசிரியர் பயிற்றுநர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்
    4.  மே மாத இறுதிக்குள் school conversion and counseling.
    மேலும் தகவல்கள் 9.5.2015 அன்று விழுப்புரத்தில் நடைபெறும் மாநில செயற்குழுவில் தெரிவிக்கப்படும். இவண் தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம்.

    9 comments:

    Unknown said...

    ஒட்டு மொத்த ஆசியர்பயிற்றுநர்களின் முன்னேற்றத்தினை விடுத்து , போட்டிக்காக கூட்டம் நடத்த முனைந்திருப்பது தங்களின் சிறுபிள்ளைத்தனத்தை காட்டுகிறது.

    உங்களால் முடியவில்லையெனில் ஒதுங்கிக்கொள்ளுங்கள் நாங்கள் பார்த்துக்கொள்ளுவோம். ஆசிரியர் பயிற்றுநர்களை குழப்பி, உங்களுடைய சுயநலத்திற்காகவும் , மேலிடத்தில் நற்பெயரைச்சம்பாதிக்கும் நோக்கில் செயல்படுகிறீர்கள். ஆனால் நீங்கள் நினைக்கும் மேலிடத்தில் தங்களை வைத்து பிரித்தாளும் சூழ்ச்சியினை செய்துகொண்டிருக்கின்றனர்.

    அனைத்து ஆசிரியர்பயிற்றுநர்களையும் பள்ளிக்கு மாற்றம் செய்ய உயர்நீதிமன்றத்தில் போரடிப்பெற்ற உரிமையினை செயல்படுத்த மாட்டேன் என உயர் அதிகாரிகள் அடம்பிடித்துக்கொண்டிருக்கும் வேளையில் இப்படி நீங்கள் துக்ளக் வேலை செய்வது முறையானதல்ல.
    10.05.2015 அன்று அனைத்து மாவட்டத்திலுள்ள ஆசிரியர் பயிற்றுநர்களையும் ஒருங்கிணைத்து உண்ணாவிரதப்போரட்டம் முடிவெடுத்த நிலையில் 09.05.2015 அன்று கூட்டம் நடத்தப்போகிறேன் என கூறியிருப்பது வருத்த்த்தை அளிக்கிறது.

    சங்கம் விடுத்து அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களும் தவறாது திண்டுக்கல்லில் சங்கமிக்க அன்புடன் அழைக்கின்றோம்.
    இடம்: திண்டுக்கல்
    நாள் : 10.05.2015

    Unknown said...

    வணக்கம்! பதவி சுகவாசிகளே!! எலக்ட்ரானிக்ஸ் போராளிகளே! குண்டாசட்டியில் குதிரை ஓட்டும் ராஜகுமாரர்களே!! ஒரு மாநில அளவிலான பட்டினி போராட்டத்தினை முதல் முதலில் சென்னையில் நடத்தாமல், உங்கள் குண்டாசட்டி மாவட்டத்தில் நடத்தும் மா........தலீவர் நீங்களே! 2015ன் சிறந்த நடிகன்! அதுவும் 04/12/2014 அன்று வழங்கிய நீதிமன்ற தீர்ப்புக்காக ஆறு மாதம் கழித்து, அனுதாப அலைகளைப் பெற முயற்சி செய்யும்பொருட்டு, குண்டாசட்டில் குதிரை ஓட்ட போகிறீர்கள்! வாழ்த்துக்கள்! சர்க்கஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள்!! ஆள் குறைவாக இருந்தால் சொல்லி அனுப்புங்கள்! மன்னிக்கவும், சர்க்கஸ்க்கு வராமலா?
    எலக்ட்ரானிக்ஸ் போராளிகளே! வீட்ல யாரேனும் பெரிய மனுசன் இருந்தால் பேச சொல்லு, பதில் சொல்றேன்! கைப்புள்ள சர்க்கஸ்க்கு Practice ஆரம்பி!

    2007 ஆம் ஆண்டு முதல் சங்கத்தின் செயல்பாடுகளை நிர்ணயம் செய்து, முறையாக 2009ல் பதிவு செய்யப்பட்டது. ஆனால், 2007 முதலே, ஈட்டிய விடுப்பு 30 நாட்கள் (ஆதாரம் இயக்குநரின் ஆணையில் பார்வையில் மாநிலத்தலைவர் திரு. கே.சம்பத் அவர்களின் கோரிக்கை என இருக்கும் சிறுப்புள்ளகளே, இதுமட்டுமல்ல பல உள்ளது); இரண்டு முறை FTA தொகை உயர்த்தி பெற்று தந்தது; மேற்பார்வையாளர்களுக்கு தலைமைஆசிரியர்களுக்கு சமமான ஆணைகள் வழங்க அரசானண பெற்றது; நிறுத்தப்பட்ட TA/DA திரும்ப பெற்றது; பல ஆயிரம் ஆசிரியர்கள் இன்றும் TET தேர்வினை தேர்ச்சி பெற முடியாமல் அரசு வேலையினை இழந்துவிடுவோமா? என தவித்துக்கொண்டிருக்கும்நிலையில் சுமார் 1000 ஆசிரியர்பயிற்றுநர்களுக்கு வெறும் தலா ரூ.500/- செலவில் நீதிமன்றத்தின் மூலம் விலக்கு ஆணை பெற்று தந்தது யார்? காசியின் பாண்டியர்களா? ராஜகுமாரர்களா? இல்லவே இல்லை! “தனி மனித போராளி, அஞ்சா நெஞ்சன், உண்மையான செயல்பாட்டுத் தலைவன் திரு.கே.சம்பத் அவர்களே! தமிழ்நாடு அனைத்து வள மைய சங்கத்தின் நிரந்தர மாநிலத்தலைவர் திரு.கே.சம்பத் அவர்கள். உன்னால் மறுப்பதற்கு ஆதாரம் உள்ளதா? திராணியிருந்தால் வெளியீடு. ஆனால், திரு. கே.சம்பத் அவர்களால் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு நீதிமன்ற வழக்கினைப் பயன்படுத்தி எங்களிடம் ஒட்டுண்ணியாக இருந்த “முன்னாள் மா….தலீவர் காசியானவரும், இந்நாள் தலீவர் ராசகுமாரரும் ரூபாய் இரண்டு லட்சங்களை (ரூ.200000) வசூல் செய்துவிட்டு, சங்கத்திலிருந்து விலகிவிட்டனர்,ஆனால், ஏதோ அந்த வழக்கின் மூலம் ஆசிரியர்பயிற்றுநர்களின் உண்மையான மாநிலத்தலைவர் திரு.கே.சம்பத் சம்பாதித்து விட்டதாகச் சொல்லிக்கொண்டு, துக்ளக் அரசியல் நடத்துவது நீதான் என்பது உலகறியும்! ரூ.500/- மட்டும் வைத்துகொண்டு சென்னைக்கு செல்லலாம், ஆனால், திரும்ப வருவதற்கு டிக்கெட் எடுக்கப் பணம் இருக்காது தெரியுமா? ச்..சே…. உனக்கும், உன்னை சேர்ந்த 27எலக்ட்ரானீக்ஸ் போராளிகளுக்கு எப்படி தெரியும்? தெரிய வாய்ப்பே இல்லை.நீங்கள்தான், குண்டாசட்டியில் குதிரை சர்க்கஸ் காண்பிப்பவர்கள் ஆச்சே! கோமாளி ……...பியை ஒரு மனுசனாக மாற்றியது நீங்களா? அப்படியானால், கோமாளி…..பியை TET எழுதி தேர்ச்சி பெற சொல்லு. நாங்கள் பதில் சொல்ல, கேட்பவர்களுக்கு தகுதி வேன்டும், கைப்புள்ளகளே!






    Unknown said...

    நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்ட ஒரேயொரு வழக்கு, அதுவும் 04/12/2014 அன்று தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்கினை வைத்துக் கொண்டு, 885 ஆசிரியர்பயிற்றுநர்களை மட்டும் பள்ளிக்கு அனுப்பலாம் என (Shall pass appropriate order) வழங்கப்பட்ட தீர்ப்பினை வைத்துக்கொண்டு, அனைத்து ஆசிரியர்பயிற்றுநர்களையும் ஏமாற்றி, தவறான தகவல்களைப் பரப்பி, அவசியமில்லாமல் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்பட்ட வந்த நிலையில், அரசுக்கு எதிராக, பொய்யான கருத்துக்களை பரப்பி, விளம்பரத்திற்காக மட்டுமே வழக்கு தொடர்ந்து பள்ளிக்கு பணியிடமாறுதலைத் தடுத்துநிறுத்தி, ஆசிரியர்பயிற்றுநர்களின்மீது அதிகாரிகள் எதிர்ப்பினை காட்ட தூண்டியது யார்?ராஜகுமாரர்களே! நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவில்லை? திராணி இல்லையா? பயமா? தைரியம் இல்லையா?
    இந்த ஒரேயொரு தோல்வியடைந்த, காலாவதியான வழக்கு தவிர, வேற ஏதேனும் நீங்கள் செய்து உள்ளீர்களா? எலக்ட்ரானீக்ஸ் போராளிகளே! அனுதாப அலைகளை தேடி அலையும் நீங்கள் உண்மையானவர்களா? அல்லது ஆசிரியர்பயிற்றுநர்களின் நலனுக்காக மட்டுமே அலைந்து கொண்டிருக்கும், சுமூக பேச்சுவார்த்தையின் மூலம் சாதித்து வரும் நாங்கள் உண்மையான தலைவரா? என்பது உலகறியும் கைப்புள்ளகளே! விளம்பரத்திற்காக தரமில்லாத, துக்ளக் அரசியல் நடத்தும் தரமில்லாத நபர்கள் நீங்கள் எங்களைப்பற்றி விமர்சனம் செய்ய என்ன தகுதி பெற்றுள்ளீர்கள்? போராட்டம் என்பது கடமையை செய்துவிட்டு, உரிமைகளை விதிகளுக்குட்பட்டு பெற வேண்டும், பெற்றதை பாதுகாக்க வேண்டும். அதனை விட்டுவிட்டு, குழாய் அடி சண்டை போடக்கூடாது. இன்னொரு முறை விமர்சனம் செய்வதை விட்டுவிட்டு, உருப்படியாக ஏதேனும் பண்ணுங்க பாஸ்!

    kumaran said...

    All r join.dont publish negative comment

    Unknown said...

    urupudiyana valaya pakkaratha vittutu pathavi sugathugaga BRTE kalai palivangum Mr. Sampath, Mr. RajKumar rendu perum othiki kollugal BRTE conversion athuva nadakkum. Please ungalin pathavi kaka pavam appavi BRTE kali palivanka vendom. please odividungal.
    Thanks
    Jesuraj

    Unknown said...

    ஆசிரியர் பயிற்றுநர் நண்பர்களே!

    சிந்திப்பீர்...

    மே 10 ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் என்று அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் செயற் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு அச்செய்தி மாநில திட்ட இயக்குநரிடம் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசோ அல்லது அதிகாரிகளோ உண்மையாகவே பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் எம்சங்க நிர்வாகிகளிடமல்லவா பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும்.

    பிப்ரவரி 16 ம் நாள் எம்சங்க மாநில பிரதிநிதிகள் மாநில திட்ட இயக்குநரை சந்தித்து கோரிக்கைகளை வைத்த போது MHRD ஒப்புதல் TRB நியமனம் முதலிய நீண்ட கால நடைமுறைகளுக்கு பின்னரே பள்ளிக்கு மாறுதல் என்று கூறிய நிலையில் இம்மாத இறுதியில் கலந்தாய்வு என்பது சாத்தியமா?

    உயர்நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் விதமாக 885 பயிற்றுநர்களை பள்ளிக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருகின்றது நமது நிர்வாகம். 885 + 500 = 1385 க்கு பதில் வெறும் 500 நபர்களை மட்டும் பள்ளிக்கு அனுப்பினால் திருப்தியடையுமா நம் சமூகம்...

    2013 டிசம்பர் மாதம் அரசாணை 249 வெளியானதிலிருந்து நம் எதிர்ப்பை ஆர்ப்பாட்டங்கள், அறப்போராட்டங்களின் வாயிலாக காட்டாமல் இருந்து நீதிபதி தீர்ப்பில் அதைக் குறிப்பிட்ட போதுதான் நமக்கு உறைத்தது. அதிகாரிகளின் தெளிவான சூழ்ச்சியால் நாம் வீழ்த்தப்பட்டோம். இனியொரு முறை அச்சூழலை அனுமதிக்ககூடாது.

    ஒரு புழு கூட தனக்கு ஆபத்தெனில் தனது எதிர்ப்பை காட்டும். ஆனால் நமது இனமோ சரியான வழிகாட்டுதல், மாநில அளவிலான ஒருங்கிணைப்பின்றி 21ஜூன் 2014 அன்று விருப்ப மாறுதல் என எழுதிக் கொடுத்து நம் கையாலே நம் தலையில் மண்ணையள்ளி போட்டுக்கொண்டோம்.

    உங்களிடம் பணிவான வேண்டுகோள் :
    அதிகாரிகளின் சூழ்ச்சி வலையில் மீண்டும் சிக்கிக் கொள்ளாதீர்.
    அதிகாரிகள் இன்று இருப்பது ஒரு துறை நாளை வேறு துறை.
    நமது ஒற்றுமை மட்டுமே நமக்கு கை கொடுக்கும்.

    ஆசிரியர் பயிற்றுநர்களின் உரிமைக்கான முதல் போராட்டம் வரும் ஞாயிறன்று திண்டுக்கல்லில்.

    திரள்வோம் திண்டுக்கல்லில்...
    நம் பட்டினிப் போராட்டத்தின் வலிமை அசைக்கும் அதிகார வர்க்கத்தை....

    கூஜா தூக்கிகளின் தாஜா வார்தைகளின் ஜாலங்கள் இனி எடுபடாது....

    அணிதிரள்வோம்.... சாதிப்போம்....
    வெற்றிபெறுவோம்.....

    Unknown said...

    “இந்த உலகம் கெட்டுபோவது கெட்டவர்களால் அல்ல; கைக்கட்டி வேடிக்கைப் பார்ப்பவர்களால்தான் திரு, ஜேசுராஜ் அவர்களே! அதில் ஒருவர்தான் நீங்கள்! சங்கங்ளுக்குள் ஆரோக்கியமான போட்டியும், விமர்சனங்களும் இருப்பது இயற்கையே!! நீ இதுவரை எந்த சங்கக் கூட்டத்தில், எத்தனை முறை பங்கேற்றுள்ளாய்? உனக்கு கிடைத்த பலன்கள் அனைத்து தானாகவே வந்தது என நினைத்து கொனண்டுள்ளாய்? அது உன அறியாமை! உன்னை போல் வெட்டி, விமர்சர்களால்தன், இவ்வளவும். சும்மா பத்து பைசா செலவில், வீட்டில் உட்கார்ந்து கொண்டு விமர்சனம் செய்வதை விட்டுவிட்டு இரண்டு சங்க நிகழ்வில் ஏதேனும் ஒன்றில் பங்கேற்று, உன் விமர்சனத்தினை வை!

    Unknown said...

    vimarsanam irukka vendum k zoom avarkala athuvum arockiyamanathaga irukka vendum. enna sathanikalai solli vote kekka porikala, neegal enna Politiciana, neegal viduthulla vimarasanam oruvari oruvar katti kuduppathum, yar periya all yenpathai BRTE kal nirnayungal enpatharkaka ve inthe vimarsanakkal kuduthu ulirkal. athi thavirthu two group kalaithuvittu oru group ga joint panni poradinal victory kittum illavittal "uru rendu pattal kuthadikku konnttatom" enpathu government ungalai payanpaduthum. Thanks
    jesuraj

    Unknown said...

    அனைத்து ஆசிரியர் பயிற்றுநா்களுக்கும் அன்பு வணக்கங்கள்
    மன்மத வருடம் சித்திரை மாதம் 27 ஆம் நாள் 10.05.2015 காலை 10 மணி முதல் மாலை 5.30 மணிவரை மலைக்கோட்டை மாநகரமாம் திண்டுக்கல்லில் 28 மாவட்டங்களைச் சார்ந்த ஆசிரியா் பயிற்றுநா்கள் அலைகடலென ஒன்று திரண்டு, திண்டுக்கல் மாநகரமே விழாக்கோலம் பூண்ட பெருமிதம்.
    ஐயங்கார் பெட்ரோல் நிலையம் முதல் அரசு தலைமை மருத்துவமனை வரையிலும் பந்தல் அரங்கு நிறைந்த காட்சி.

    தமிழக ஆசிரியா் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியா்கள் சங்கங்கள் வியக்கும் வண்ணம் ஆசிரியா் பயிற்றுநா்கள் ஒன்று திரண்ட மாநில அளவிலான உண்ணாவிரத அறப்போராட்டம்.

    அழைப்பினை ஏற்று நம்முடைய உண்ணாவிரத அறப்போராட்டத்திற்கு வலுசேர்ப்பித்து இரும்புக்கரம் கோர்த்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    நம்முடைய வெற்றிமைல்கல்லினை அடையும் நாள் வெகுதொலைவில் இல்லை.

    நட்புடன்
    இனியன்