Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, May 3, 2015

    மன உளைச்சலால் தூக்கம் வரவில்லையா?: இதோ, அறுபதே வினாடிகளில் நிம்மதியான உறக்கத்துக்கு சுலபமான வழி

    பணிச்சுமை, குடும்பப் பிரச்சினை, கடன் தொல்லை போன்றவை மனதின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக் கொள்ளும் வேளைகளில் ஏராளமானவர்கள் இரவு வேளைகளில் தூக்கம் வராமல் துன்பப்படுவதுண்டு. விடியும்வரை புரண்டுப் புரண்டு படுத்தும் தூக்கம் வராமல் அவதிப்படும் சிலர் மறுநாள் காலை தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபடுகின்றனர். இதன் விளைவாக ஞாபகமறதி உள்ளிட்ட பல்வேறு எதிர்வினைக்கு இவர்கள் ஆளாகிப்போகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
    இதைப்போன்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அறுபதே வினாடிகளில் எளிதாக உறங்கும் முறையை அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உடற்கூறியல் நிபுனரான டாக்டர் ஆண்ட்ரூ வெய்ல் என்பவர் கண்டுபிடித்துள்ளார்.
    இந்த எளிதில் உறங்கும் கலைக்கு ’4-7-8 டெக்னிக்’ என அவர் பெயர் சூட்டியுள்ளார். இந்தக் கலையை பயன்படுத்தி உறங்கச் செல்பவர்கள் நிம்மதியான உறக்கத்துக்கு பின்னர், மறுநாள் காலை புத்துணர்ச்சியுடன் விழிக்கவும் முடியும் என ஆண்ட்ரூ வெய்ல் கூறுகிறார்.
    இந்த முயற்சியின் முதல்படியாக, கண்களை மூடியபடி நான்கு வினாடிகளுக்கு மூச்சினை நன்றாக உள்ளே இழுக்க வேண்டும். அந்த மூச்சுக் காற்றை ஏழு வினாடிகளுக்கு நாசிக்குள் நிறுத்திவைத்து அமைதியாக இருக்க வேண்டும். பின்னர், 8 வினாடிகளுக்கு மூச்சுக்காற்றை ஒரே சீராக வெளியேற்ற வேண்டும்.
    இப்படி, தொடர்ந்து மூன்று முறை (57 வினாடிகளுக்கு) செய்ய வேண்டும். அடுத்த 3 நிமிடங்களுக்குள் உங்களுக்கு நிச்சயமான, நிம்மதியான உறக்கம் வந்துவிடும் என இவர் கூறுகிறார்.
    இது எப்படி சாத்தியம் ஆகிறது?.., இந்த முறையில் உங்கள் நுரையீரலுக்குள் மூச்சுக்காற்றை நிறுத்தி வைக்கும் அந்த 7 வினாடிகள் முக்கிய பங்காற்றுகின்றது. இதன் மூலம் நுரையீரல் முழுவதும் ஆக்சிஜன் பரவுகின்றது. இது உடலை தளர்வடையச் செய்து, ஆசுவாசப்படுத்துகின்றது.
    அதேவேளையில், இத்தனை வினாடிகளுக்கு இதை செய்ய வேண்டும் என உங்கள் மனதையும் நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதால், நினைவை பாதிக்கும் தேவையற்ற அழுத்தமும், எரிச்சலும் தானாகவே மனதைவிட்டு வெளியேறி விடுகின்றது. இந்த முறைகளின் மூலம் மனதை விட்டு விலகாமல் அட்டை போல ஒட்டிக் கொண்டிருக்கும் தேவையற்ற மனக்கவலைகளையும் வெளியேற்றி விட்டால், அடுத்த வினாடியே நிம்மதியான உறக்கம் உங்களை தழுவிக் கொள்ளும் என டாக்டர் ஆண்ட்ரூ வெய்ல் உறுதியுடன் கூறுகிறார்.

    1 comment:

    C.Sugumar said...

    யோக நூல்களில் தூஙகுவது எபப்டி என்று விாிவாகவே உள்ளது. யோகாநூல்களில் உள்ளதையோ மருத்துவா் தனது சொந்த கருத்தாக சொல்லியிருப்பது ஆச்சாியமே. யோக கலை ஒவ்வொரு இந்தியனுக்கும் அவனது அன்றாட வாழிவில் இடம் பெறும் வண்ணம் கற்றுக் கொடுக்கப்படவேண்டும். இதற்கு ஐந்தாண்டு திட்டமே போடலாம். சுாிய நமஸ்காரம் என்ற பெயரை காலை பயிற்சி என்று பெயாில் அனைவருக்கும் மிக தீவிரமாக கற்றுக் கொடுக்க வேண்டும். நல்ல பயனுள்ள தகவலை வெளியிட்டமைக்கு நன்றி.